லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் வகையில், இந்திய வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நம்பிக்கையளித்திருக்கிறது கோலி அன்ட் கோ. 1983ல் கபில்தேவும் 2011ல் தல தோனியும் வென்றதுபோலவே இந்த ஆண்டு கோலியும் உலக கோப்பையை தாய்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வென்றது. இந்த முறை கோலி தலைமையிலும் இந்திய அணி அதே போல வெற்றி பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. இந் நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ட்விட்டர் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: விராட் கோலி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட பள்ளியின் மண் அவரை ஆசீர்வதிக்கும் வகையில் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது. உங்கள் வாழ்த்து க்களையும், ஆசீர் வாதத்தையும் தெரிவிக்க இந்தப் பதிவை 5 பேருக்கு ஷேர் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலி படித்த டெல்லியிலுள்ள விஷால் பாரதி பள்ளியிலிருந்து அவருக்காக இந்தப் பரிசு அனுப்பப்பட்டுள்ளது. இதே போல, மகேந்திர சிங் தோனிக்கு ராஞ்சியிலிருந்தும், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்தும் அவர்கள் விளையாடிய மண் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.