Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடுப்பில் 'இனவாத' ட்வீட்..... ஸ்காட்லாந்து வீரருக்கு உலகக் கோப்பையில் இருந்து 'கல்தா'

ஹாமில்டன்: இனவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட ஸ்காட்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் மஜித் ஹக் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் ஸ்காட்லாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி இருந்தது. அந்த 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அணி இலங்கை அணியை நேற்று எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் ஸ்காட்லாந்து தோல்வி அடைந்தது.

Scotland`s Majid Haq axed from World Cup for racial tweet

இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் ஆல் ரவுண்டரான மஜித் ஹக் விளையாடவில்லை.

மஜித் ஹக்

ஸ்காட்லாந்து அணியின் ஆல் ரவுண்டரான மஜித் ஹக் உலகக் கோப்பை போட்டிகளில் அவரது நாட்டு அணி விளையாடிய முந்தைய 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்தார், மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார்.

இலங்கை

இலங்கைக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி ஆடிய ஆட்டத்தில் மஜித் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இனம்

நீங்கள் சிறுபான்மையினராக இருந்தால் எப்பொழுதுமே கடினம் தான்!! நிறம், இனம் #colour #race என்று மஜித் ஹக் ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.

பாகிஸ்தானியர்

32 வயதாகும் மஜித் ஹக் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தானிய வம்சாவளியினராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய மஜித் ஹக் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடாமல் வீடு திரும்புகிறார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

இதுவரை தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள ஸ்காட்லாந்து வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Story first published: Thursday, March 12, 2015, 10:29 [IST]
Other articles published on Mar 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+