
யார் இந்த மஜித் ஹக்?
37 வயதான ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மஜித் ஹக். இவர் கடந்த 2006இல் இருந்து 2015ஆம் ஆண்டு வரை ஸ்காட்லாந்து தேசிய கிரிக்கெட் அணியில் ஆடினார். இவர் சுழற் பந்துவீச்சாளர் ஆவார். இவருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை
இவர் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோ பகுதியில் இருக்கும், ராயல் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

ஆதரவுக்கு நன்றி
அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக கூறினார். மருத்துவமனை ஊழியர்கள் தன்னை சிறப்பாக கவனித்துக் கொண்டதாகவும், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் அவர்.

60 விக்கெட்கள்
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த மஜித் ஹக் 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் ஸ்காட்லாந்து அணிக்காக ஆடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 60 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

அதிகபட்ச விக்கெட் சாதனை
இவர் ஸ்காட்லாந்து அணிக்காக 2015 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணிக்காக கடைசியாக ஆடி இருந்தார். இவர் 60 விக்கெட்கள் வீழ்த்தியதே ஸ்காட்லாந்து அணியில் ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட் சாதனையாக 2019 வரை இருந்தது.

ஸ்காட்லாந்தில் பாதிப்பு
ஸ்காட்லாந்தில் மட்டும் இதுவரை 266 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுள்ளனர். அவர்களில் ஒருவராக சிக்கி உள்ளார் மஜித் ஹக். யுனைட்டட் கிங்டமின் ஒரு பிரதேசமான ஸ்காட்லாந்தில் பாதிப்பு குறைவாக உள்ளது.

இங்கிலாந்து பாதிப்பு
அதே சமயம் இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளை சேர்த்து பார்க்கும் போது இதுவரை 3,269 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருகின்றனர். அந்த நாட்டில் தற்போது அனைத்து பொது இடங்களையும் மூடி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் அச்சம்
கால்பந்து வீரர்கள், கூடைப்பந்து வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. ஆனால், கிரிக்கெட் வீரர்களில் முதன் முறையாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் கிரிக்கெட் ஆட வெளிநாடுகளுக்கு சென்ற மற்ற கிரிக்கெட் வீரர்கள் அச்சத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











