2015 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஸ்காட்லாந்து, எமிரேட்ஸ் அணிகள் தகுதி
கிறிஸ்ட்சர்ச்: 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்காட்லாந்தும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் தகுதி பெற்றுள்ளன.
இந்த இரண்டு அணிகளும், கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டியின் கடைசி நாளில் வெற்றி பெற்று உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
புள்ளிகள் அடிப்படையில் இந்தப் போட்டித் தொடரில் எமிரேட்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது. 2வது இடத்தை ஸ்காட்லாந்து பிடித்தது.

எந்தெந்த பிரிவில்
இரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பது சனிக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியின் இறுதியில் தெரியும்.

பிப்ரவரி 14 முதல்
பிப்ரவரி 14 முதல் மார்ச் 25ம் தேதி வரை உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

2வது முறையாக வரும் எமிரேட்ஸ்
2வது முறையாக உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு எமிரேட்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த அணி 1996ம் ஆண்டு போட்டியிட்டது.

ஸ்காட்லாந்துக்கு இது 3வது போட்டி
ஸ்காட்லாந்துக்கு இது 3வது போட்டியாகும். இதற்கு முன்பு 1999 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இது உலகக் கோப்பையில் மோதியுள்ளது.


Click it and Unblock the Notifications