AUS vs SCO -பவர்பிளேவில் உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா.. 9.4 ஓவரில் முடிந்த மேட்ச்
எடன்பர்க் : ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் டி20 போட்டி இன்று எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆக மிட்செல் மாஸ் களமிறங்கினார். டி20 உலக கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோல்வியை தழுவிய பிறகு ஆஸ்திரேலியா பங்கேற்ற முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி இதுவாகும்.

ஆஸ்திரேலிய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க ப்பட்டிருந்தது. இதன் அடுத்து முதலில் களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணியின் யாருமே அதிகபட்சமாக 28 ரண்களை தாண்டவில்லை. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே, மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரி என அதிரடியாக விளையாட முற்பட்டு 16 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து ஓலி ஹாரிஸ் 6 ரன்களிலும், பிராண்டன் மெக்முல்லன் 19 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 23 ரன்களிலும் மேத்யூ கிராஸ் 27 ரன்கள் எடுக்க மற்ற அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். எனினும் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு தரப்பில் ஷான் ஆப்பர்ட் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆடம் சம்பா நான்கு ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போன்று சேவியர் பார்லெட் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டும், ரெய்லி மெர்டித் ஒரு விக்கட்டும், கேமரான் கிரீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் அறிமுக வீரராக ஐபிஎல் தொடரில் கலக்கிய ஜேக் பிரேசர் ஆஸ்திரேலிய அணியில் களமிறங்கினார். பெரும் எதிர்பார்க்கப்பட்ட அவர் மூன்று பந்துகளை எதிர்கொண்டு டக் ஆனார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தது இருவரும் ஸ்காட்லாந்து பந்துவீச்சை சுக்குநூறாக பிரித்து மேய்ந்தனர்.
எப்படி பந்து வீசினாலும் அடிப்பேன் என்ற நோக்கில் டிராவிஸ் ஹெட் ஒரு காட்டு காட்டினார். தீபாவளி இரண்டு மாதம் முன்பே வந்து விட்டதோ என்று மக்கள் மத்தியில் ஐயம் ஏற்படும் வகையில் இருவரும் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினர். இதனால் டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி பவர் பிளேவில் ஆறு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் டி20 யில் பவர் பிளேவின் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்று இருக்கிறது. இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பவர் பிளேவில் 102 ரன்கள் அடித்தது அதிகபட்ச பவர் பிளே ஸ்கோராக இருந்தது. ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டையும் பார்த்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு செர்பியா அணிக்கு எதிராக ரோமானிய அணி விக்கெட் இழப்பின்றி பவர் பிளேவில் 116 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் இரண்டு அணிகளுமே கற்றுக் குட்டி அணிகள். இந்த இரண்டு அணியுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத முழு உறுப்பினர்கள் கிடையாது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி 9.4 ஓவர்களில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி போட்டியை முடித்தது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டர்களும் ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். இது போன்று கேப்டன் மிச்சல் மார்ஸ் 12 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். ஜோஷ் இங்கிலீஷ் 13 பந்துகளில் 27 ரன்களும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஐந்து பந்துகளில் எட்டு ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.


Click it and Unblock the Notifications