Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த பவுலரும் செய்யாத மாபெரும் உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து வீரர் சார்லி கேசல்.. ரபாடா சாதனை காலி

டண்டி : ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணியில் அறிமுகமான சார்லி கேசல் என்ற வேகப் பந்துவீச்சாளர் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் தனது அறிமுகப் போட்டியில் செய்யாத சாதனையை செய்து மிரள வைத்தார்.

ஓமனுக்கு எதிரான ஐசிசி உலகக் கோப்பை லீக் 2 தொடரில் ஸ்காட்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் சோல் கடைசி நேரத்தில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், அவருக்கு பதிலாக சார்லி கேசல் ஸ்காட்லாந்து அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.

Scotland vs Oman Scotland debut bowler Charlie Cassell breaks the best debut bowling record in ODI

தனது முதல் அறிமுக போட்டியில் ஆடிய சார்லி கேசல் தான் வீசிய முதல் பந்திலேயே ஓமன் அணியின் கேப்டன் சீஷான் மக்சூத் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஆயான் கான் விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமான ஒரு வீரர் தான் வீசிய முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதில்லை. யாரும் செய்யாத அந்த சாதனையை சார்லி கேசல் செய்தார்.

அதைத் தொடர்ந்து விக்கெட் வேட்டையாடிய அவர் 5.4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு அறிமுக பந்துவீச்சாளர் ஒரு நாள் போட்டிகளில் செய்த சிறந்த பந்துவீச்சு என்ற சாதனையை செய்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க வேகப்பந்து பேச்சாளர் காகிசோ ரபாடா வங்கதேச அணிக்கு எதிராக 8 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அந்த சாதனையை முறியடித்துள்ள சார்லி கேசல் தற்போது 21 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த போட்டியில் ஓமன் அணி 21.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்த ஆடிய ஸ்காட்லாந்து அணி 17.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. ஸ்காட்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, July 23, 2024, 9:54 [IST]
Other articles published on Jul 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+