Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்.. நட்சத்திர வீரர் கொடுத்த ஐடியா.. ! சூப்பரா இருக்கே !

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

India vs Pakistan: Asia Cup-ல் நடந்த Epic Clashes | Aanee's Appeal

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த முறை இருவரும் மோதியபோது பாகிஸ்தான அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தியது. இதனால் பதிலடி தர வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் அளித்துள்ள பேட்டியில் பாகிஸ்தான அணி இரண்டு தொடக்க வீரர்களை நம்பியே இருப்பதாக கூறினார். பாபர் அசாம்,முகமது ரிஷ்வான் ஆகியோர் ஓப்பனிங்கில் களம் இறங்கி அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை தருவார்கள் என்று குறிப்பிட்ட ஸ்டைரிஸ் அதன் பிறகு ஃபக்கர் சமான் உள்ளிட்ட வீரர்கள் களத்திற்கு வந்து ரன் குவிக்க முயற்சி செய்வார்கள் என்று ஸ்டைரிஸ் கூறினார்.

 விரைவில் வீழ்த்துங்கள்

விரைவில் வீழ்த்துங்கள்

பாகிஸ்தான் எப்படி போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்து, அதன்படி விளையாடிக் கொண்டிருப்பதாக கூறினார். இதனால் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் தொடக்க வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும் என்றும் ஸ்டைரிஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

 வெற்றி கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

இவ்விரு வீரர்களையும் அந்த அணி பெரிதும் நம்பியுள்ளதால், அவர்களை வீழ்த்தி பாகிஸ்தான் நடு வரிசை வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே களத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

 விமர்சனம்

விமர்சனம்

பாகிஸ்தானுக்கு எது பிடிக்காதோ அதனை தான் இந்திய வீரர்கள் செய்ய வைக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். சுழற் பந்துவீச்சை வைத்து ரிஸ்வான், பாபர் அசாமை சமாளித்து விடலாம் என்று நினைத்தால் அது கை கொடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மறுபுறம் இந்திய அணி அதிரடியாக ஆடினாலும் போட்டியை எப்படி அணுகுவது என்ற தெளிவு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Story first published: Thursday, August 25, 2022, 20:51 [IST]
Other articles published on Aug 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+