Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

25 பந்துகளில் அதிரடி சதம்... மொத்தம் 20 சிக்சர்கள்..! வெளுத்து வாங்கிய அந்த வீரர்

லண்டன்:ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் நடக்கும் ஒரு தொடரில் வெறும் 25 பதில் பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான இரண்டாம் கட்ட கவுண்டி டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் குளூசெஸ்டைர் அணி வீரராக களம் இறங்கியவர் ஜார்ஜ் முன்சி.

இந்த ஜார்ஜ் முன்சி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். தற்போது இங்கிலாந்து கவுண்டி அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.

தொடக்கமே அதிரடி

தொடக்கமே அதிரடி

இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய அவர் அதிரடியாக ஆடி அனைத்து பந்துகளையும் விளாசினார். தொடக்கம் முதலே ஜார்ஜ் முன்சி அடித்து ஆடியதை யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை.

6 பந்தில் 6 சிக்சர்

ஆட்டத்தின் போது ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். மொத்தம் 39 பந்துகள் மட்டுமே பிடித்து 147 ரன்கள் விளாசித் தள்ளினார் ஜார்ஜ் முன்சி. இறுதியாக அவரது அணி 20 ஓவர்களின் முடிவில் 326 ரன் குவித்தது.

20 சிக்சர்

20 சிக்சர்

ஜார்ஜ் முன்சி மொத்தம் 20 சிக்சர்களும் 5 பவுண்டரிகள் விளாசினார். மேலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி உள்ளார். 50 நிமிடம் தான் அவர் களத்தில் இருந்துள்ளார்.

326 ரன்கள் குவிப்பு

326 ரன்கள் குவிப்பு

அவருடன் வந்த மற்றொரு வீரர் 53 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் டாம் ப்ரைஸ் என்னும் வீரர் 23 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதன் காரணமாக 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20 ஓவர்களின் முடிவில் 326 ரன்கள் எடுத்தது அந்த அணி.

ஜார்ஜால் வெற்றி

ஜார்ஜால் வெற்றி

இதுவரை டி20 கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக 175 ரன்கள் மட்டுமே எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அதிவேக சதம் ஆக ஜார்ஜ் முன்சி அடித்த சதம் மட்டுமே தற்போது வரை உள்ளது. ஜார்ஜ் முன்சி, அதிரடியாக ருத்ர தாண்டவம் ஆடியதால், அவரது அணி112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, April 23, 2019, 11:30 [IST]
Other articles published on Apr 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+