Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஷித் கான் ஓவரில் 26 ரன்கள்.. மரண அடி அடித்த கிளாஸன்.. தோல்வியடைந்தும் கரை சேர்ந்த மும்பை பங்காளிஸ்!

மோரிஸ்வில்லி: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் அணிகள் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை எதிர்த்து சியாட்டில் ஆர்காஸ் அணி விளையாடியது. இதில் பார்னல் ஓய்வில் இருந்ததால் ஆர்காஸ் அணியின் கேப்டனாக ஷனகா களமிறங்கினார். இதில் டாஸ் வென்ற சியாட்டில் ஆர்காஸ் அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Seattle Orcas won by 2 Wickets against MI NeyYork in the Last League of Major League Cricket 2023

இதையடுத்து மும்பை நியூயார்க் அணிக்காக ஜெஹாங்கீர் - மோனாங்க் படேல் களமிறங்கினர். இதில் படேல் 2 ரன்களிலும், ஜஹாங்கீர் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, பூரன் களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் மும்பை நியூயார்க் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எதிர்முனையில் நின்றிருந்த அசாம் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பூரன் அரைசதம் கடந்து அசத்தினார்.

12 ஓவர்களிலேயே 120 ரன்களை மும்பை நியூயார்க் அணி கடந்து அசத்தியது. பின்னர் பூரான் 68 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த பொல்லார்ட் 18 பந்துகளில் 34 ரன்களும், டேவிட் வீசா 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் வந்த போல்ட் 6 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி 20 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

Seattle Orcas won by 2 Wickets against MI NeyYork in the Last League of Major League Cricket 2023

தொடர்ந்து சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு டி காக் - அன்வர் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் டி காக் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜெயசூர்யா ரன் ஏதும் எடுக்காமல் ரஷித் கான் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் அன்வர் - கிளாஸன் இணை சேர்ந்து மும்பை நியூயார்க் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டியது. அரைசதம் அடித்த அன்வர் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கிளாஸன் அரைசதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார்.

குறிப்பாக ரஷித் கான் வீசிய 16வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று 26 ரன்களை விளாசி தள்ளினார். தொடர்ந்து போல்ட் வீசிய 18வது ஓவரில் 3 விக்கெட்டுகள் சரிய, கடைசி 2 ஓவர்களில் சியாட்டில் அணி 17 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 19வது ஓவரில் பவுண்டரியை விளாசி சதம் அடித்த கிளாஸன், கடைசி ஓவரின் 2வது பந்திலேயே சிக்சர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் சியாட்டில் ஆர்காஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ப்ரீடம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Story first published: Wednesday, July 26, 2023, 15:28 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+