Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-இலங்கை மோதும் டெஸ்ட்... இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்துவருகிறது. தற்போது அங்கு பெய்யும் மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது.

இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இந்த போட்டி டிசம்பர் மாத இறுதி வரை நடக்க இருக்கிறது.

Second day of first test match between India vs Srilanka

நேற்று கொல்கத்தாவில் நடத்த முதல் நாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. கே.எல் ராகுல் டக் அவுட் ஆனார். தவான் 8 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். கோஹ்லியும் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி சென்றார்.

இன்றும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. ரஹானே, அஸ்வின் இருவரும் தலா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். புஜாரா நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

தற்போது இந்திய அணி 32.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் போட்டிக்கு இடையூறாக மீண்டும் மழை பெய்து வருகிறது. அங்கு பெய்யும் மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது.

Story first published: Friday, November 17, 2017, 16:05 [IST]
Other articles published on Nov 17, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+