Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிடும் நியூசிலாந்து... திமிறி எழுமா இந்தியா... என்ன நடக்கும் இன்று?

புனே: மும்பையில் ஞாயிற்று கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக இந்தப் போட்டியில் 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்தார். இது அவரின் 31 வது ஒருநாள் சதமாகும்.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்க இருக்கிறது.

 நியுசிலாந்து இந்தியா மோதிய போட்டி

நியுசிலாந்து இந்தியா மோதிய போட்டி

ஞாயிற்று கிழமை மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 49.0 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.

 மாஸ் காட்டும் நியூசிலாந்து

மாஸ் காட்டும் நியூசிலாந்து

இந்திய அணிக்கு எப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக டஃப் கொடுக்கும் அணி என்றால் அது கண்டிப்பாக நியூசிலாந்து அணி தான். நியூசிலாந்து நாட்டின் மைதானத்தில் நடந்தாலும், இந்திய மைதானங்களில் நடந்தாலும் நியூசிலாந்து ஒரே மாதிரிதான் விளையாடி இருக்கிறது. அதேபோல் இந்த முறையும் நியூசிலாந்து அணி மிகச்சிறந்த பார்மில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியின் 'போல்ட்' போடும் வேகப்பந்துகளை சமாளிக்க வேண்டும் என்றால் இந்திய அணி இன்னும் நான்கு பேட்ஸ்மேன்களை தென்னாப்பிரிக்க அணியிடம் இருந்து கடன் வாங்கித்தான் விளையாட வேண்டும். மூன்று கோஹ்லிகள் ஒன்றாக சேர்ந்து உருவான கேப்டனாக இருக்கிறார் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன். நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை பார்த்து இந்திய பவுலர்கள் இன்னும் கண்ணீர் விடாதது மட்டுமே மிச்சம்.

 முதல் சீரிஸ் தோல்வியா

முதல் சீரிஸ் தோல்வியா

கடந்த 2015 அக்டோபர் மாதம் 25ந் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் தோற்றதன் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. அதுதான் கடந்த 2 வருடங்களில் இந்தியா சொந்த மண்ணில் அடைந்த "சீரிஸ் தோல்வி" ஆகும். அதன்பின் இந்திய மண்ணில் நடந்த அனைத்து ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டி இந்த தொடரை தீர்மானிக்கும் போட்டியாகும். அந்த மோசமான வரலாறு இன்று மீண்டும் திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மிக முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க இருக்கிறது. இந்த போட்டி இந்த ஒருநாள் தொடரை எல்லா வகையில் மாற்றும் போட்டியாகும். இன்று மதியம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த போட்டி நடக்க இருக்கிறது. பெரும்பாலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே பேட்டிங் ஆர்டரும் தொடரும் என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, October 25, 2017, 9:52 [IST]
Other articles published on Oct 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+