Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டார் வீரர்களுக்கு கொரோனா உறுதி.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய போட்டி ரத்து.. ரசிகர்கள் கவலை!

ஜமைக்கா: ஒரே அணியில் 5க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ்- அயர்லாந்து ஒருநாள் போட்டி பாதியிலேயே பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் கொரோனா பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி எடுக்கப்பட்ட பரிசோதனையில் அயர்லாந்து அணி கேப்டன் ஆண்டி பால்பிர்னி, முக்கிய வீரர்கள் லோர்கேன் டக்கர், பயிற்சியாளர் டேவிட் ரிப்ளே ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் பாதிப்புகள்

முதல் பாதிப்புகள்

ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியின் போது அயர்லாந்து அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்கள் இருவரை மட்டும் தனிப்படுத்திவிட்டு, திட்டமிட்டபடி போட்டியை நடத்தி முடித்தனர். ஆனால் தற்போது மேலும் 3 பேருக்கு பரவியிருப்பதால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டி ஒத்திவைப்பு

போட்டி ஒத்திவைப்பு

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் உள்ள மற்ற அனைவருமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமை ஓரளவிற்கு சரியான உடன் 2வது ஒருநாள் போட்டி எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Hardik Pandya Set To Miss India’s Home Series Against West Indies | Oneindia Tamil
நஷ்டம்

நஷ்டம்

எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு கொரோனா உறுதியானது போன்று எந்த தகவலும் வெளியாகவில்லை. வரும் ஜனவரி 14ம் தேதியன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறவிருப்பதால், அதற்கு ஓரளவிற்கு நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இரு அணிகளும் உள்ளன. ஏற்கனவே பொருளாதார ரீதியாக சிக்கலில் இருக்கும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இதுபோன்று போட்டிகள் ஒத்திவைக்கப்படுவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, January 11, 2022, 12:56 [IST]
Other articles published on Jan 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+