Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்டிங்.. பாக்.கை பழி தீர்க்க உதவுவாரா அணிக்கு திரும்பிய ஆன்டர்சன்?

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் லார்ட்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்நாட்டு அணிக்கு ஷாக் கொடுத்தது.

பாகிஸ்தான் வீரர்களும், அந்த நாட்டு ரசிகர்களும் இந்த வெற்றியை ஆரவாரத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என இங்கிலாந்து பின்தங்கி உள்ளது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.

ஆன்டர்சன் திரும்பினார்

ஆன்டர்சன் திரும்பினார்

காயத்தில் இருந்து மீண்டுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இன்று களமிறங்கியுள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருந்து காயத்தால் 3வது இடத்திற்கு போயுள்ள ஆண்டர்சன் வருகை பாகிஸ்தானை அச்சுறுத்தும் என நம்பலாம்.

யாஷிர் ஷா ஆதிக்கம்

யாஷிர் ஷா ஆதிக்கம்

முதல் டெஸ்டில் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாஷிர் ஷா இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பொதுவாக இங்கிலாந்து அணி லெக் ஸ்பின்னில் கடுமையாக திணறும். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர், வகாப் ரியாஸ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் நெருக்கடி தருவதால் இங்கிலாந்துபாடு திண்டாட்டம் ஆகியுள்ளது.

பாக். வீரரிடம் தஞ்சம்

பாக். வீரரிடம் தஞ்சம்

இதற்கிடையே சுழற்பந்து வீச்சை சமாளிக்க பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக்கை 2வது டெஸ்ட் போட்டிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது இங்கிலாந்து வாரியம்.

அடி கொடுத்தவரிடம் அபயம்

அடி கொடுத்தவரிடம் அபயம்

ஒல்டு டிராபோர்டு மைதானத்தில் கடந்த 2001-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 108 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் சக்லைன் முஸ்டாக் 74 ரன்களுக்கு 4 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். தற்போது அவரிடம் இங்கிலாந்து அணி உதவி கேட்டுள்ளது.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இதனிடையே, டாசில் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. போட்டி தொடரை சமன் செய்ய இங்கிலாந்தும், முன்னணி வகிக்க பாகிஸ்தானும் வரிந்து கட்டியுள்ளன.

Story first published: Friday, July 22, 2016, 16:56 [IST]
Other articles published on Jul 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+