Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லார்ட்ஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. ஸ்டோக்ஸ் இல்லை

Recommended Video

லார்ட்ஸ் 2வது டெஸ்ட்..இங்கிலாந்து அணி அறிவிப்பு..ஸ்டோக்ஸ் இல்லை- வீடியோ

லண்டன்: இந்திய அணிக்கெதிராக லார்ட்ஸில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தற்போது இரண்டாவது போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

second test squad


இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் சரிவர விளையாடாத டேவிட் மாலன் மற்றும் வெற்றிக்கு காரணமான பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் இரண்டாவது போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஒல்லி போப் மற்றும் கிறிஸ் ஓக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். கடந்த போட்டியில் விளையாடாத மொயீன் அலி மற்றும் ஜேமி போர்ட்டர் ஆகியோரும் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளார்கள்.

ஒல்லி போப், 20 வயதே நிரம்பிய வலது கை ஆட்டக்காரர். இவர் 15 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். கவுண்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக 684 ரன்களை 85.50 என்ற சாரசரியில் குவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் டேவிட் மாலனுக்கு பதிலாக அணியில் இடம் பெற்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் வரும் திங்கள் கிழமை பிரிஸ்டோலில் நடந்த பார்ட்டி கிளப்பில் நடைபெற்ற வழக்கில் ஆஜராக உள்ளதால் அவர் இரண்டாவது போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும் வழக்கு தள்ளி வைக்கப்பட்டால் அவர் போட்டிக்கான அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் மாலன் கடந்த தொடர்களில் சரிவர பேட்டிங் செய்யாத காரணங்களுக்காக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் ஸ்லிப்பில் சில கேட்ச்களை கோட்டை விட்டதும் முக்கியமான காரணமாகும். அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று அவர் முதல் இன்னிங்சில் விராட் கோஹ்லிக்கு 21 ரன்களில் தவறவிட்ட கேட்ச். அதுவே ஆட்டத்தின் திருப்புமுனை ஆனது.

இங்கிலாந்து அணி விவரம்:

அலிஸ்டர் குக், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் (கேப்டன்),கீட்டன் ஜென்னிங்ஸ், ஜானி பேர்ஸ்டாவ், சாம் கர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட், அதில் ரஷீத், மொயீன் அலி, ஜேமி போர்ட்டர், கிறிஸ் ஓக்ஸ், ஒல்லி போப்.







Story first published: Monday, August 6, 2018, 8:26 [IST]
Other articles published on Aug 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+