For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்குள் கோலி நுழைந்த ரகசியம் இதுதான்.. போட்டு உடைத்த முன்னாள் வீரர்!

மும்பை : விராட் கோலி இன்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

Recommended Video

Virat Kohli’s entry into Indian team revealed

ஆனால், அவர் எப்படி இந்திய அணிக்குள் நுழைந்தார்? அதுபற்றி அவரை இந்திய அணியில் முதன் முதலில் தேர்வு செய்த அப்போதைய தேர்வுக் குழு தலைவர் திலிப் வெங்க்சர்க்கார் பேசி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் வீரர்களுக்காக நடந்த ஒரு கிரிக்கெட் தொடர் மூலமாகத் தான் கோலி இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேன்

சிறந்த பேட்ஸ்மேன்

விராட் கோலி யாரும் நினைத்து பார்க்காத நேரத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார். அவர் 2008இல் இந்திய அணியில் இடம் பெற்று, படிப்படியாக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டார். 2014 காலகட்டத்தில் அவர் உலகின் மறுக்க முடியாத சிறந்த பேட்ஸ்மேனாக மாறி இருந்தார்.

சச்சினுக்குப் பின்

சச்சினுக்குப் பின்

சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் அவரைப் போன்ற ஒரு வீரர் வர வாய்ப்பில்லை என கருதப்பட்டது. அவரது பல்வேறு சாதனைகளை யாராலும் தொடக் கூட முடியாது என கருதப்பட்டது. ஆனால், விராட் கோலி அதை சாத்தியமாக்கினார்.

முன்னணி பேட்ஸ்மேன்

முன்னணி பேட்ஸ்மேன்

அவர் தற்போது பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்திலும், டெஸ்ட் போட்டிகளில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலி தான். மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.

எமெர்ஜிங் பிளேயர்ஸ் தொடர்

எமெர்ஜிங் பிளேயர்ஸ் தொடர்

விராட் கோலியை இந்திய அணிக்கு தேர்வு செய்தவர் திலிப் வெங்க்சர்க்கார். அவர் விராட் கோலியின் திறமைகளை முன்பே ஊகித்து அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்தார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமெர்ஜிங் பிளேயர்ஸ் தொடர் தான்.

கோலி இடம் பெற்றார்

கோலி இடம் பெற்றார்

2008இல் ஆஸ்திரேலியாவில் எமெர்ஜிங் பிளேயர்ஸ் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர்கள் அணி பங்கேற்றது. அந்த அணியில் இடம் பெற்றார் விராட் கோலி.

அதிக சராசரி

அதிக சராசரி

அந்த தொடரில் கோலி சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவித்து இருந்தார். 5 போட்டிகளில் 204 ரன்கள் குவித்தார். அதன் சராசரி 51. அந்த தொடரில் குறிப்பிட்ட போட்டியில் அவர் ஆடியதை கண்டு தான் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்ததாக திலிப் வெங்க்சர்க்கார் கூறி உள்ளார்.

சதம் அடித்த பின்னும்..

சதம் அடித்த பின்னும்..

"முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி துவக்க வீரராக ஆடினார். நியூசிலாந்து அணி 240-250 ரன்கள் எடுத்து இருந்தது. கோலி 123* குவித்தார். அவர் சதம் அடித்த பின்னும், அணிக்காக போட்டியை வென்று கொடுத்தார். கடைசி வரை நாட் அவுட் ஆக இருந்தார்" என குறிப்பிட்டார் வெங்க்சர்க்கார்.

இந்திய அணிக்கு தேர்வு

இந்திய அணிக்கு தேர்வு

கோலி சதம் அடித்த பின் திருப்தி அடையாமல் வெற்றி பெறும் வரை போராடியதை கண்ட பின்பே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்தே ஆக வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார் வெங்க்சர்க்கார். அதன் பின்பே 2008இல் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கோலி அறிமுகம் செய்யப்பட்டார்.

Story first published: Friday, June 12, 2020, 16:44 [IST]
Other articles published on Jun 12, 2020
English summary
Secret behind Kohli’s entry into Indian team revealed by then chief selector Dilip Vengsarkar. Secret behind Kohli’s entry into Indian team revealed by then chief selector Dilip Vengsarkar.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+