ரவி சாஸ்திரி செலக்ஷன் பின்னணியில் சீக்ரெட்ஸ் இருக்கு..!! ஆனா சொல்ல முடியாது.. ஷாக் தந்த கபில்..!!
மும்பை: பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானதுக்கு சில ரகசியங்கள் உள்ளன, அதை வெளியில் சொல்ல முடியாது என்று கபில் தேவ் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஏற்கனவே இருக்கும் ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு நவம்பர் 24 வரை அதாவது, டி 20 உலக கோப்பை வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருப்பார்.
பலத்த எதிர்பார்ப்பு இடையில் வேறு ஒரு பயிற்சியாளர் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வானார். இது குறித்து கபில் தேவ் கூறியிருக்கும் பல விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த காரணங்கள்
ரவி சாஸ்திரி ஏன் தேர்வானார் என்று கபில்தேவ் கூறிய காரணங்கள் இவைதான். நாங்கள் அனைவரும் தனித்தனியாக எங்களது கேள்விகளை ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அளித்தோம். அதன்படி யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

ரகசியங்கள் உள்ளன
கடைசியில் நாங்கள் அனைவரும் கொடுத்த மதிப்பெண்களில் ரவி சாஸ்திரி அதிக மதிப்பெண் எடுத்து மீண்டும் பயிற்சியாளராக தேர்வானார். அவர் தேர்வானதுக்கு இன்னும் சில விஷயங்களும், ரகசியங்களும் இருக்கின்றன.

ரகசியம்
ஆனால் அந்த இரகசியத்தை பிசிசிஐ வெளியே சொல்லாது. அது பிசிசிஐயின் ரகசிய முடிவு என்று கபில் தேவ் கூறினார். இந்த விஷயத்தில் மற்றொரு குழு உறுப்பினர் அன்சுமன் கெய்க்வாட்டும் சில முக்கிய விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

வெவ்வேறு மதிப்பெண்கள்
அவர் கூறியிருப்பதாவது: 3 பேர் கொண்ட குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் வழங்கினர். சாஸ்திரி முதலிடத்திலும், மைக் ஹசன் மற்றும் டாம் மூடி இரண்டாமிடத்திலும் இருந்தனர்.

நன்மை உண்டு
தற்போதைய பயிற்சியாளராக, ரவி சாஸ்திரி கிரிக்கெட்டின் அமைப்பு மற்றும் வீரர்களை நன்கு அறிந்தவர். மற்ற வேட்பாளர்களோ இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. ஏற்கனவே கணினியை அறிந்த ஒரு நபர், வீரர்கள் மிகவும் நன்றாக, நன்றாக பேச முடியும், ஒரு நன்மை உண்டு என்றார்.


Click it and Unblock the Notifications