Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுரேஷ் ரெய்னாவும், பிரியங்கா செளத்ரியும்... ஒரு "லவ்லி" காதல் கதை..!

டெல்லி: தனது சிறு வயது தோழியான பிரியங்கா செளத்ரியை மணம் புரியவிருக்கிறார் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா. இவர்களது திருமணம் ஏப்ரல் 3ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைந்து சுரேஷ் ரெய்னா ஊர் திரும்பியதும் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

தற்போது ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியி்ல் பிசியாக இருக்கிறார் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்தம்...

நிச்சயதார்த்தம்...

மார்ச் 12ம் தேதி ரெய்னா - பிரியங்காவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மீரட்டில் உள்ள காட்வின் ஹோட்டலில் இது நடந்தது.

வங்கிப் பணியாளர்...

வங்கிப் பணியாளர்...

பிரியங்கா வங்கிப் பணியாளர் ஆவார். நெதர்லாந்தில் அவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் உத்திரப்பிரதேச மாநிலம் பரூத் ஆகும். இருப்பினும் தற்போது குடும்பம் மீரட்டி்தான் வசித்து வருகிறது.

சிறுவயது தோழி...

சிறுவயது தோழி...

ரெய்னாவும், பிரியங்காவும் சிறு வயதிலிருந்தே பழகி வருகின்றனர். இவர்களது குடும்பமும் கூட நண்பர்களாகப் பழகி வருகின்றனவாம். உண்மையில் ரெய்னா மற்றும் பிரியங்காவின் அப்பாக்கள் முருத்நகர் ஆயுதத் தொழிற்சாலையில் இணைந்து பணியாற்றியவர்களாம்.

சிறப்பு விருந்தினர்கள்...

சிறப்பு விருந்தினர்கள்...

இவர்களது திருமண விழாவுக்கு பிரதமர் மோடி, உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனராம்.

ஸ்ருதிஹாசன்...

ஸ்ருதிஹாசன்...

சுரேஷ் ரெய்னா முன்பு நடிகை ஸ்ருதி ஹாசனுடன் நெருங்கிப் பழகியதாக கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இருவரும் இணைந்து பல இடங்களில் காணப்பட்டதாக கூட செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதை இருவரும் மறுத்திருந்தனர்.

Story first published: Tuesday, March 17, 2015, 13:18 [IST]
Other articles published on Mar 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+