பைனல்ஸுக்கு இந்தியா வரும்... நியூசி.யை வீழ்த்தும்.. மேன் ஆப் தி மேட்ச் கோஹ்லி.. தொடர் நாயகன் ஷமி!!!!
சென்னை: உலகக் கோப்பைப் போட்டியை வைத்து இன்னும் என்னென்ன ஊகங்களெல்லாம் வரப் போகிறதோ தெரியவில்லை. அதிர வைக்கும் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் இதோ ஒரு புது தகவல்... பரபரப்பைக் கிளப்பி வருகிறது பேஸ்புக்கில். புக்கிகளின் கணிப்பாம் இது.
காலிறுதிப் போட்டிகள், அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி முடிவுகளை இந்த புக்கிகள் கணித்துள்ளனராம். ஸ்கோர் என்ன, ஆட்ட நாயகன் யார் என்பது முதல் கொண்டு அனைத்து விவரங்களையும் இதில் போட்டு புக்கிகளின் கூற்று இது என்றும் கூறி களேபரப்படுத்துகிறார்கள் சமூக வலைதளங்களில்.

அந்த வேடிக்கையைப் பாருங்கள்....
- முதல் அரை இறுதி - நியூசிலாந்து 222 ஆல் ஆவுட் ஆகும். தென் ஆப்பிரிக்கா 186 ரன்களில் ஆல் அவுட்டாகும்.
- முதல் அரை இறுதியில் நியூசிலாந்து 36 ரன்களில் வெற்றி பெறும்.
- 2வது அரை இறுதி - 50 ஓவர்களில் இந்தியா 309. ஆஸ்திரேியா 215 ரன்களில் ஆல் அவுட்டாகும்.
- 2வது அரை இறுதியில் இந்தியா 94 ரன் வித்தியாசத்தில் வெல்லும்.
- இறுதிப் போட்டி - 50 ஓவர்களில் இந்தியா 310 ரன்கள் எடுக்கும்.
- நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகுமாம்.
- இறுதிப் போட்டியில் 20 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று உலகக் கோப்பையைத் தக்க வைக்குமாம்.
- இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக விராத் கோஹ்லி தேர்ந்தெடுக்கப்படுவாராம்.
- இறுதிப் போட்டியில் விராத் கோஹ்லி 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பாராம்.
- தொடர் நாயகனாக இந்தியாவின் முகம்மது ஷமி தேர்வாவாராம். இவர் 24 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தைப் பிடிப்பாராம்.
என்ன சொல்றதுன்னே தெரியலை.. என்ன பண்றதுன்னே புரியலையே...!
Story first published: Sunday, March 22, 2015, 11:25 [IST]
Other articles published on Mar 22, 2015


Click it and Unblock the Notifications