மந்தனா மனசுக்குள்ள இன்னும் "அவர்"தான் இருக்காராமே.. !
டெல்லி: ஸ்மிருதி மந்தனாவுக்கு சின்ன வயசில் இருந்தே ஹிரித்திக் ரோஷன் மேலதான் கிரஷ்ஷாம்.. இன்று வரை அதேதானாம். இதை அவரே சொல்லியுள்ளார்.
Recommended Video
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு போய் திரும்பி வந்தது முதலே வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள் நமது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள். வீட்டில் குட்டி குட்டிச் சேட்டைகள் செய்தது போக சமூக வலைதளங்கள் பக்கமும் அவ்வப்போது வந்து போகின்றனர்.
போரடித்துக் கிடப்பதால் ரசிகர்களுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு ரசிகர் கேள்விக்குத்தான் தனது உள் மனசு மேட்டரை வெளியில் கொண்டு வந்து கொட்டியுள்ளார் ஸ்மிருதி.

அவர்தான் இப்பவும் இருக்கார்
டிவிட்டரில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட ஒரு கேள்வியின்போது, உங்களது கிரஷ் யார் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ஸ்மிருதி பதிலளிக்கையில், சின்ன வயசிலிருந்தே ஹிருத்திக்தான் என்று கூறியுள்ளார். இவர் இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் கூட இதேபோல கேட்கப்பட்ட கேள்விக்கு எனக்கு 10 வயசிலிருந்தே ஹிருத்திக்தான் கிரஷ் என்று கூறியிருந்தார்.

எனக்குத் தெரியலையேப்பா
அதேபோல இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்க சிங்கிளா இல்லையா என்று. இதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. மாறாக, தெரியலையே என்று சஸ்பென்ஸ் வைத்து பதில் போட்டிருந்தார். அதேபோல இன்னொருவர், உங்களது லைப் பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு ஸ்மிருதி பதிலளிக்கையில், அவர் என்னை நிறைய காதலிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனக்கும் ஹர்மன்ப்ரீத்துக்கும் போட்டி
அதேபோல டிரஸ்ஸிங் ரூமில் யார் குப்பையா போட்டு வைப்பது என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு அவர் இந்த விஷயத்தில் எனக்கும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும்தான் செம போட்டியா இருக்கும் என்று ஹர்மன்ப்ரீத்தையும் கலாய்த்திருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர்தான் இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஆவார்.

ஜெமிமாவையும் இழுத்து விட்டு
இன்னொருவர் வந்து கோள் மூட்டி விட்டுப் போயிருந்தார். அதாவது ஸ்மிருதி மந்தனா நீங்க உங்க தோழியரை மிஸ் செய்கிறீர்களா என்று அவர் கேட்டிருந்தார். அதற்கு அவர் ஜெமிமா ரோட்ரிக்ஸை டேக் செய்து இப்ப ரொம்ப சந்தோஷமா இருப்பா என் தோழி என்று கலாய்த்திருந்தார். இதைப் பார்த்த ஜெமிமா சோகத்துடன் அலெக்ஸா இந்த சோகப் பாட்டைப் பாடு என்று சொல்ல, உடனே அவரை சமாதானப்படுத்த இன்னொரு இந்திப் பாட்டை போட்டு விட்டிருந்தார் ஸ்மிருதி.


Click it and Unblock the Notifications