Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேவாக், டிராவிட் மகன்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான U19 தொடருக்கு தேர்வு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 18 அன்று தொடங்குகிறது. இத்தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 மல்டி-டே போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐ தேர்வு குழுவினர் ஒருநாள் மற்றும் மல்டி-டே போட்டிகளுக்குத் தனித்தனி அணியை அறிவித்துள்ளனர்.

இதில், வீரேந்தர் சேவாக்கின் 18 வயதான மகன் ஆர்யவீர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட்டின் 17 வயதான மகன் அன்வே டிராவிட் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Sehwag and Dravid s Sons Aaryavir and Anvay Selected for India U-19 Squad Against Australia

டெல்லி பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வரும் ஆர்யவீர் சேவாக்கிற்கு, இந்திய அணியில் இடம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அன்வே டிராவிட், கடந்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் விளையாடி 14 மற்றும் 87 ரன்கள் குவித்து அசத்தியதால் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு லக்ஷ்யா ராய்ச்சந்தானி கேப்டனாகவும், யஷ்பர்தன் சிங் சவுகான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மல்டி-டே போட்டிகளுக்குச் சவுகான் கேப்டனாகவும், ராய்ச்சந்தானி துணை கேப்டனாகவும் செயல்படுவர். மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் மல்டி-டே போட்டி ராஜ்கோட்டிலும், இரண்டாவது மல்டி-டே போட்டி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன. ஒரே காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் மகன்கள் இந்திய அணிக்காக ஒன்றாக களம் இறங்கவுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அண்டர்-19 ஒருநாள் போட்டி அணி விவரம்: லக்ஷ்யா ராய்ச்சந்தானி (கேப்டன்), யஷ்பர்தன் சவுகான் (துணை கேப்டன்), ரஜத் பாகல் (விக்கெட் கீப்பர்), ஆர்யவீர் சேவாக், வி.கே. வினீத், குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மனல் சவுகான், அன்வே டிராவிட் (விக்கெட் கீப்பர்), வி. யஷ்வீர், ரோஹித் யாதவ், ஷாவின் வினோத், மோஹித் உல்வா, சிகுருபதி வெங்கடா, காவ்யா படேல்.

இந்திய அண்டர்-19 மல்டி-டே போட்டி அணி விவரம்: யஷ்பர்தன் சவுகான் (கேப்டன்), லக்ஷ்யா ராய்ச்சந்தானி (துணை கேப்டன்), சாகர் விர்க், குஷாக்ரா ஓஜா, மனல் சவுகான், குஷ் படேல், மானவ் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), அபிப்ராய் பிஸ்வாஸ் (விக்கெட் கீப்பர்), ரோஹித் யாதவ், இஷான் ஓம், அயான் அக்ரம், பிரணவ் ராகவேந்திரா, பிரியான்ஷு சிங், மோஹித் உல்வா, ஆர்யன் யாதவ்.

இந்திய அணிக்கு தலைவலியாக மாறிய இலங்கை வீரர் சோனல்.. 4 இன்னிங்ஸ்களிலும் 50+ ரன்கள் குவிப்பு

இந்திய அணிக்கு தலைவலியாக மாறிய இலங்கை வீரர் சோனல்.. 4 இன்னிங்ஸ்களிலும் 50+ ரன்கள் குவிப்பு

போட்டி அட்டவணை விபரம்:

  • முதலாவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 18, 2026 (ராஜ்கோட்)

  • இரண்டாவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 21, 2026 (ராஜ்கோட்)

  • மூன்றாவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 23, 2026 (ராஜ்கோட்)

  • முதலாவது மல்டி-டே போட்டி: செப்டம்பர் 27 முதல் 30 வரை, 2026 (ராஜ்கோட்)

  • இரண்டாவது மல்டி-டே போட்டி: அக்டோபர் 5 முதல் 8 வரை, 2026 (அகமதாபாத்)

Story first published: Thursday, August 27, 2026, 13:31 [IST]
Other articles published on Aug 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+