Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஜாராவை சேருங்க.. காரணம் என்ன தெரியுமா.. அதகளப்படுத்தும் சேவாக்கின் காமெடி கலாட்டா!

டெல்லி:இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சத்தேஸ்வர் புஜாராவை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் செம காமெடி.

இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 9ம் தேதி துவங்க உள்ளது.

Sehwag asks india to have pujara in the second test

இந்த நிலையில், இந்திய அணியில் சத்தேஸ்வர் புஜாராவை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின்போது, சாமியார் போல் உடை, ருத்திராட்ச மாலைகள் அணிந்து, ஆசி அளித்த பாபா சேவாக், புஜாராவை எதற்காக சேர்க்க வேண்டும் என்றும் காரணம் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியில் போப் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டி லார்ட்ஸில் நடக்க உள்ளது. அதனால் இந்திய அணியில் புஜாரா இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது லார்ட் மைதானத்தில் போப் பங்கேற்பதால், இந்திய அணியில் பூஜாரி இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சேவாக் இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.

பாபா சேவாக்கின் இந்த காமெடிசென்ஸ் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Monday, August 6, 2018, 14:04 [IST]
Other articles published on Aug 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+