சேவாக் மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவார்.. உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகிறார்
உலக அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.சேவாக்கிற்கு தற்போது 36 வயதாகிறது.
இந்திய பேட்ஸ்மேன்களிலேயே, டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 2 முறை 300 ரன்களை கடந்த வீரர் சேவாக் மட்டுமே. இவரது அதிரடிக்கு ரசிகர்களும் அதிகம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் சஞ்சய் பங்கர். இவர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராகவும் உள்ளார். இந்நிலையில் நிருபர்களிடம் சஞ்சய் பங்கர் கூறியதாவது:
சேவாக் நிச்சயமாக இந்திய அணிக்காக ஆடும் திறனோடுதான் உள்ளார். சேவாக் கடைசியாக, சேவாக் மிகவும் உற்சாகபடுத்த்கூடியவர். அவர் தனது உடல் திறனை மேம்படுத்த அதிக பயிற்சிகள் செய்து வருகிறார். அவர் கவுரவமான முதல் தரமான போட்டிகளில் ஆடி உள்ளார். நாங்கள் நேற்று போட்டி சூழ்நிலைகளில் பயிற்சியில் ஈடுபட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் அவர் முதல் தரமான கிரிக்கெட் விளையாடி உள்ளார்.
இவ்வாறு பங்கர் கூறினா்.


Click it and Unblock the Notifications