Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணாடி போட்ட ஷேவாக்கு.. கீறாருப்பா நல்லா ஷோக்கா.. ரன்தான் எடுக்க மாட்டேங்குறாரு!

டெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய வீரரரான வீரேந்திர ஷேவாக் கண்ணாடியெல்லாம் போட்டு க்யூட்டாக பேட்டிங் செய்கிறார். ஆனால் பார்மைத்தான் காணோம்.

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் அவரது விக்கெட்டை எதிரணியினர் கஷ்டமே இல்லாமல் தட்டிப் பறித்துள்ளனர்.

சுத்தமாக பார்மில் இல்லை ஷேவாக். சிங்கம் போல விளையாடக் கூடிய ஷேவாக் களத்தில் பரிதாபமாக நிற்பது பார்க்கவே கஷ்டமாகத்தான் உள்ளது.

சிங்கம் போன் ஷேவாக்

சிங்கம் போன் ஷேவாக்

ஷேவாக் களத்தில் நிற்கிறார் என்றாலே எதிராளிள் நடுங்கியது ஒரு காலம். காரணம், அவர் அடித்தால் அதிரடிதான் என்பதால்.

பார்ம் இல்லாத ராசா

பார்ம் இல்லாத ராசா

ஆனால் இப்போது ஷேவாக் நிலைமை மோசமாகி விட்டது. அவர் சுத்தமாக பார்மில் இல்லை.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து வந்த ஷேவாக் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார்.

முதல் போட்டியில் 19

முதல் போட்டியில் 19

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடந்த முதல் போட்டியில் அவர் 19 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார்.

2வது போட்டியில் ரெண்டே ரெண்டு

2வது போட்டியில் ரெண்டே ரெண்டு

2வதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்களை மட்டுமே எடுத்தார் ஷேவாக்.

கண்ணாடி நல்லாத்தான் இருக்கு

கண்ணாடி நல்லாத்தான் இருக்கு

தற்போது ஷேவாக் பவர் கிளாஸ் போட்டிருக்கிறார். இதுதான் அவரது இந்திய அணியின் மறு வருகையை தடுத்து நிறுத்தக் காரணம். இருப்பினும் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் கண்ணாடி போட்டபடிதான் தான் விளையாடுகிறார் ஷேவாக்.

பார்முக்கு வருவது முக்கியம்

பார்முக்கு வருவது முக்கியம்

ஆனால் தொடர்நது அவர் சொதப்பலாக ஆடி வருவது அவரது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

Story first published: Monday, April 21, 2014, 18:23 [IST]
Other articles published on Apr 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+