Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிரணிக்கு பொறி கலங்க வைக்கும் 'பவர் பிளே' ராஜா வீரேந்திர சேவாக்!

டெல்லி: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பல பேட்ஸ்மேன்கள் களமிறங்கியிருந்தாலும், தனக்கே உரிய அதிரடி ஆட்டத்தின் மூலம் தனியிடத்தைப் பிடித்தவர் சேவாக். பேட்டிங் பவர்பிளே ஓவரான முதல் 15 ஓவருக்குள் சேவாக் அவுட் ஆகவில்லை என்றால் அந்த போட்டிகளில் பெரும்பாலானவற்றில் பெரிய ஸ்கோரை இந்தியா குவித்துள்ளது. அணி வெற்றியும் பெற்றுள்ளது.

அதிரடி

அதிரடி

ஃபீல்டர்கள் தலை மீது பந்தை தூக்கியடித்து, பேட்டிங் பவர்பிளே நேரத்தில் அதிக ரன்களை குவித்துவிடுவதில் சேவாக் வல்லவர். டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சேவாக்.

பச்சை சட்டைகளுக்கு எதிராக

பச்சை சட்டைகளுக்கு எதிராக

1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சேவாக். இதேபோன்று 2001ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

டெஸ்ட் கிங்

டெஸ்ட் கிங்

மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேவாக், 23 சதங்கள், 32 அரை சதங்கள் விளாசி மொத்தம் 8,586 ரன்களைக் குவித்துள்ளார்.

ஒன்டே அதிரடி

ஒன்டே அதிரடி

251 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,273 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்களும், 38 அரை சதங்களும் அடங்கும். 19 டி20 போட்டிகளில் 394 ரன்கள் எடுத்துள்ளார்.

2 முறை 300

2 முறை 300

இரண்டு முறை முச்சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். பல போட்டிகளில் அணி வெற்றி பெற முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Tuesday, October 20, 2015, 16:31 [IST]
Other articles published on Oct 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+