Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தன் பலம் தெரியாமலேயே சாதிச்சிருக்கார்.. இது டிரைலர் தான்" - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய சேவாக்

லண்டன்: இந்திய வீரர் ஒருவருக்கு அவர் பலம் அவருக்கே தெரியவில்லை என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் வீரேந்திர சேவாக்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி, கடந்த ஆக.4ம் தேதி நட்டிங்கமில் தொடங்கியது.

இந்திய அணிக்கு கடைசி நாளில் கைக்கு எட்டிய வெற்றி வாய்ப்பு மழையால் வீணானது. இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.

 இந்தியாவுக்கு ஏமாற்றம்

இந்தியாவுக்கு ஏமாற்றம்

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட், சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க தலைக்கு 30 ரன்கள் அடித்திருந்தாலே இந்தியா எளிதில் வென்றிருக்கும். ஆனால், கடைசி நாளில் கொட்டித் தீர்த்த மழை, ஒரு ஓவரைக் கூட வீச முடியாமல் தடுத்தது. இது இந்திய அணிக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது

 ஜடேஜா அபாரம்

ஜடேஜா அபாரம்

இந்த போட்டியில், இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. மிடில் ஆர்டர் முற்றிலும் ஏமாற்றியது. கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட்டானார். பிறகு, லோ ஆர்டரில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 56 ரன்கள் எடுத்தார். இந்த 56 ரன்கள் தான் இந்திய அணி முன்னிலை பெற உதவியது. அவர் மட்டும் அடிக்காமல் 4 அல்லது 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணியின் நிலைமை தலைகீழ் ஆகியிருக்கும். கடைசி நாளில் இதே மழை இந்தியாவை காப்பாற்றி இருந்திருக்கும்.

 ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

ஜடேஜா முத்தாக டெஸ்டில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும், அவரது ஆல் ரவுண்டர் எபிலிட்டி அணிக்கு பெரியளவில் உதவியது. ஃபாஸ்ட் பவுலிங் டிராக்கில் ஜடேஜாவின் ஸ்பின் ஈடுபடாதது பெரிய விஷயமே அல்ல. அதேசமயம், அவரது பேட் பலமாக பேசியது. இந்நிலையில், ஜடேஜா குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், "ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் முக்கியமான வீரர். குறிப்பாக நாம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, முதலாவதாக அவர் 25 - 30 ஓவர்கள் பந்து வீசுகிறார். இரண்டாவதாக, அவர் 7வது அல்லது 8வது டவுனில் இறங்கி பேட்டிங் செய்கிறார். முதல் போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி வெளியேறிம்போது, அவர் அந்த முக்கியமான 56 ரன்களை அடித்தார். அந்த ரன்கள் அணிக்கு அவ்வளவு அத்தியாவசியமானவை. அவரது 56 ரன்களின் காரணமாக இந்தியா மட்டுமே முன்னிலை பெற்று இங்கிலாந்தை விட லீடிங் பொசிஷனுக்கு சென்றது "என்று சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் சேவாக் கூறினார்.

 அந்த நாள் நியாபகம்

அந்த நாள் நியாபகம்

மேலும், "ஜடேஜா இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளர், இடது கை சுழற்பந்து வீச்சாளர். இப்போது பேட் மூலமும் பேசுகிறார். அவர் தனது திறனை இன்னும் உணரவில்லை. தன்னுடைய முழு திறமையை அவர் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் அற்புதமாக விளையாடி வருகிறார். ரவீந்திர ஜடேஜா முதன்முறையாக எப்போது அணிக்குள் வந்தார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் நான் துணை கேப்டனாக இருந்தேன். அப்போது எங்களது மனப்பானை ஒரு ஆல் ரவுண்டர் அணிக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று இருந்தது. ரவீந்திர ஜடேஜாவும் அந்த அடையாளத்தோடு தான் அணிக்குள் வந்தார்" என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, August 11, 2021, 20:31 [IST]
Other articles published on Aug 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+