நிம்மதியா தூங்க முடியுதா.. இந்த ஷேவாக் செய்த சேட்டையைப் பாருங்க!
லண்டன்: டிவி வர்னணையாளராக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பணியாற்றி வரும் வீரேந்திர ஷேவாக் சூப்பர் புகைப்படங்களை தனது டிவிட்டரில் போட்டு கலகலப்பை கூட்டியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் அதிரடி நாயகன் ஷேவாக். தற்போது அவர் டிவியில் கமெண்டரி கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். ஸ்டார் டிவியின் வர்னணையாளராக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டியின்போது இவரும் கங்குலியும் இணைந்து கலக்கி விட்டனர் தங்களது பேச்சு மூலமாக. இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷேவாக்.
அது கங்குலி மற்றும் ஷேன் வார்னே தூங்கும் புகைப்படம். கங்குலி அப்படியே தரையில் படுத்துத் தூங்குகிறார். வார்னே சோபாவில் படுத்து தூங்குகிறார்.
படம் சூப்பர் என ஹர்பஜன் சிங் கமெண்ட் போட்டு விட்டுப் போயுள்ளார். ஷேவாக் கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது போலயே!


Click it and Unblock the Notifications