அகமதாபாத்: முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கு அனைவரும் கோலி மீது குறைக்கூறி வரும் நிலையில் பண்ட் மீது தாக்குதலை தொடர்ந்துள்ளார் சேவாக்.
இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் தவறான வியூகத்தால் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக், முதல் டி20 போட்டியில் அணியை மீட்க போராடிய பண்ட், மீது தனது தாக்குதலை தொடுத்துள்ளார்.

மோசமான முடிவு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் மாற்றம் கொண்டுவந்தது தோல்விக்கு முக்கிய காரணமாய் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்தும் தற்போது முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சேவாக் அதிருப்தி
இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் சேவாக், இந்திய அணி தரப்பில் போட்டிக்கு முன்னர் கூறப்பட்ட விஷயங்கள் போட்டியின் போது இரு வேறு மாறியாக நடைபெற்றது. பண்ட் மீண்டும் முழு ஃபார்மில் உள்ளார் என அவரை களமிறக்கியது. ஆனால் 23 பந்துகளில் 21 ரன்களை அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினார் என்று இன்னும் அவர் ஆக்ரோஷமாக ஆடுவார் என நிர்வாகம் நம்புகிறது. ஆனால் முதல் டி20 போட்டியை போன்றே ஆடினால் மீண்டும் அவர் பெஞ்சில் வாய்ப்பில்லாம் உட்காரவைக்கப்படுவார்.
தோனியில்லை
கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் ரிஷப் பண்டை தோனிக்கு மாற்றாக யோசிக்கிறார்கள். அவர் தோனியை போன்று ஆடுவார் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பண்ட் தோனியை போன்று ஆடவே முடியாது. அது அனுபவத்தில் இருந்து வரவேண்டிய ஒன்று. ஒருவேளை அவர் தோனியை போல ஆட முயற்சித்தால், பின்னர் தோனியை போன்றும் இல்லாமல் தன் ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியாமல் போகும் என சேவாக் தெரிவித்துள்ளார்.