Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெட்ட பய சார் இந்த சேவாக்.... இங்கிலாந்து வீரர்களின் விமர்சனத்துக்கு மீம் மூலம் பதிலடி

சென்னை: 2வது டெஸ்டில் சேப்பாக்கம் பிட்ச் சரியில்லை என கூறிய முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுக்க விரேந்திர சேவாக் கலாய்த்து ட்வீட் செய்து வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் பிட்ச் சரியில்லாததே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அவர்களை சேவாக் கலாய்து வருகிறார்.

பதிலடி

பதிலடி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் டெஸ்டு தோல்விக்கு பழி தீர்த்து கொண்டது. 4 போட்டிகள் தொடரில் 1 -1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

எப்படி

எப்படி

சென்னை பிட்ச் டெஸ்ட் போட்டிக்கு உகர்ந்தது அல்ல எனவும் அது விளையாடவே சரியான பிட்ச் இல்லை என்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், மைக்கேல் வாக் ஆகியோர் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கெவின் பீட்டர்சன் சென்னையில் உள்ளது பிட்ச் அல்ல பீச் என விமர்சித்திருந்தார்.

ஆட்டம்

ஆட்டம்

விமர்சனங்களுக்கு மத்தியிலும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தியுள்ளது. குறிப்பாக அஸ்வின் 8 விக்கெட்டுகள் மற்றும் 2வது இன்னிங்சில் சதமடித்தும் மிரட்டியுள்ளார். இந்திய அணி கேப்டன் கோலியும் அரை சதம் அடித்து அணிக்கு உதவினார்.

சேவாக்

சேவாக்

இந்நிலையில் பிட்ச் குறித்து விமர்சித்தவர்களை கலாய்க்கும் விதமாக முன்னாள் வீரர் சேவாக் ட்விட்டரில் புகழ்பெற்ற ஜானி லிவர் மீம் ஒன்றை பதிவு செய்துள்ளார். குசும்பு தனமான அவரின் அந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் அதிகளவில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, February 17, 2021, 13:40 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+