Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டில் வரலாறு படைக்கப்பட்ட தினம்.... மனம் உருகிய முன்னாள் வீரர்கள் - வீடியோ

மும்பை: உலகக்கோப்பை வென்ற 10வது ஆண்டு தினத்தையொட்டி முன்னாள் வீரர்கள் உருக்கமாக பேசியுள்ளனர்.

ஏப்.2ம் தேதி... கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத தினம். தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையை கையில் ஏந்தி வரலாறு படைத்த தினம் இன்று.

இந்நிலையில் இன்றோடு அந்த நிகழ்வு நடைபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்து முன்னாள் வீரர்கள் நினைவுக்கூர்ந்துள்ளனர்.

 யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்த நிகழ்வு குறித்து முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏப்.2, 2011... புத்தகத்தில் புதிய வரலாறு பொறிக்கப்பட்ட நாள். இது குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கோப்பையை வெல்ல முடியும் என நம்பிக்கை கொடுத்தவர் பயிற்சியாளர் கோரி கிற்ஸ்டன் எனத் தெரிவித்துள்ளார்.

சொல்ல வார்த்தை இல்லை

சொல்ல வார்த்தை இல்லை

நாங்கள் அனைவரும் உலகக்கோப்பையை நாடுக்காகவும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை பல வருடங்களாக சுமந்து வந்த சச்சினுக்காகவும் வெல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம். கோப்பையை கையில் ஏந்தி 10 வருடங்கள் ஆன போதும் இன்றும் அந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது போன்று உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

நன்றி

அது மிகவும் சிறப்புமிக்க தருணம். அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இறுதிப்போட்டியில் கம்பீர், தோனி பங்களிப்பு மிக முக்கியமானது. சச்சின் - சேவாக் பார்ட்னர்ஷிப் உதவியது அதே போல சாஹீர் காண் அந்த தொடரில் 20 விக்கெட்களை எடுத்து பெரும் உதவி செய்தார் என யுவ்ராஜ் கூறியுள்ளார்.

ஹர்பஜன்

ஹர்பஜன்

2011 உலகக்கோப்பையில் மிக முக்கிய ஸ்பின்னராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது யுவராஜ் சிங்கின் வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்துள்ளார். அதில் உலகக்கோப்பையை வென்று கொடுத்ததற்கு நன்றி சாம்பியன் யுவராஜ் என தெரிவித்துள்ளார். அதே போல இதுகுறித்து புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்துள்ள சேவாக், வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது என பதிவிட்டுள்ளார்.

Story first published: Friday, April 2, 2021, 21:32 [IST]
Other articles published on Apr 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+