Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அவங்க இஷ்டத்துக்கு வீரர்களை மாற்ற முடியாது".. கர்ஜித்த டிராவிட் - "வியர்த்துக் கொட்டிய" கோலி

இலங்கை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஓப்பனிங் பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடில்லை. கேப்டன் கோலியும், கோச் சாஸ்திரியும் வகுத்த பிளானுக்கு செக் வைத்திருக்கிறார் ராகுல் டிராவிட்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

 ஜெயிச்சே ஆகணும்

ஜெயிச்சே ஆகணும்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்க ப்ரித்வி ஷாவை அழைக்க, இந்திய அணி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவித்தன.

 பேக்-அப் ஓப்பனர்ஸ்

பேக்-அப் ஓப்பனர்ஸ்

அதேபோல், மற்றொரு வீரராக தேவ்தத் படிக்கல்லையும் இங்கிலாந்து அழைக்க, இந்திய அணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இருவருமே பேக்-அப் வீரர்களாக இருக்க வைக்க கோரிக்கை விடப்பட்டது. ப்ரித்வி ஷாவும், படிக்கல்லும் தற்போது இலங்கை தொடரில் உள்ளனர். டிராவிட் பயிற்சியாளராக உள்ள இந்திய 'ஏ' அணி, இலங்கையை 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் சந்திக்கவிருக்கிறது. இதற்காக இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை பக்காவாக தயார் செய்து வருகிறார் டிராவிட். சற்று கண்டிஷனுடன்.

 இஷ்டத்துக்கு மாற்ற முடியாது

இஷ்டத்துக்கு மாற்ற முடியாது

இந்நிலையில், ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல்லை இலங்கையில் இருந்து உடனடியாக இங்கிலாந்து அழைக்க, பிசிசிஐக்கு முறைப்படி இந்திய அணி கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அதற்கு கறாராக மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர், இங்கு டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு, வெவ்வேறு யுக்திகளுடன் வீரர்களை மன ரீதியாக தயார் செய்து வருகிறோம். இந்த நேரத்தில், அவர்களை திசை திருப்பும் விதமாக டெஸ்ட் தொடருக்கு அழைப்பது என்பது, குறிப்பாக இங்கிலாந்துக்கு அழைப்பது என்பது நிச்சயம் Back fire-ஆகத் தான் வாய்ப்புள்ளது என்று பிசிசிஐயிடம் டிராவிட் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.

 வேண்டுகோள் நிராகரிப்பு

வேண்டுகோள் நிராகரிப்பு

இந்நிலையில், 'இந்தியா டுடே' வெளியிட்டுள்ள தகவலின் படி, ஏகப்பட்ட விவாதங்களுக்கு பிறகு ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல், ஆகியோர் இந்திய அணியில் இணைய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வாளர்களுக்கு, இந்திய அணி வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் இருவரும் இங்கிலாந்து அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில் களத்திலும், களத்திற்கு வெளியேயும் மிகவும் சாஃப்ட் வீரராக அறியப்பட்ட டிராவிட், பயிற்சியாளராக மிகவும் அக்ரெஸ்ஸிவாக இருக்கிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Story first published: Wednesday, July 7, 2021, 22:55 [IST]
Other articles published on Jul 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+