இன்னும் உடல் தகுதி பெறாத ஷேவாக்குக்கு இந்திய அணியில் இடம்

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் நல்ல தொடக்கத்தைப் பெறத் தவறியதால்அதைக் கருத்தில் கொண்டு ஷேவாக்கையும் அணியில் சேர்த்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் இன்னும் முழு உடல் தகுதி பெறாமல் இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார். உடல் தகுதி பெற்றால் 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வரும் வீரர்களில் முரளி விஜய் இங்கிலாந்து தொடருக்கு சேர்க்கப்படவில்லை. மாறாக இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான அபினவ் முகுந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 17 பேர் கொண்ட அணியை நேற்று இரவு ஸ்ரீகாந்த் மற்றும் குழுவினர் அறிவித்தனர்.
முதல் போட்டியில் கெளதம் கம்பீரும், அபினவ் முகுந்த்தும் தொடக்க ஆட்டக்கார்ரகளாக களம் இறங்குவர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகுந்த் சரியாக விளையாடவில்லை. ஆனால் 2வது போட்டியில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதல் போட்டியில் செய்த தவறுகளை சட்டென திருத்திக் கொண்டு அவர் விளையாடியது தேர்வுக் குழுவினரைக் கவர்ந்ததால் அவருக்கு இங்கிலாந்து டூரிலும் இடம் கொடுத்துள்ளனர்.
அதேசமயம், கடந்த 3 ஆண்டுகளாக அவ்வப்போது நல்ல வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதிலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்த முரளி விஜய், அணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல பார்த்திவ் படேலும் அணியை வடி்டு நீக்கப்பட்டுள்ளார். விருத்திமான் சாஹா மீண்டும் திரும்பியுள்ளார்.
ஸ்ரீசாந்த்துக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அவர் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவார் என ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜாகிர்கான், முனாப் படேல், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ஹர்பஜன் சிங், அமீத் மிஸ்ரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. யுவராஜ் சிங்கையும் அணியில் சேர்த்துள்ளனர். அதேசமயம், விராத் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி விவரம்
டோணி, கெளதம் கம்பீர், அபினவ் முகுந்த், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், அமீத் மிஸ்ரா, யுவராஜ் சிங், விருத்திமான் சாஹா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications