தோனி…! போதும்... எல்லாத்தையும் விட்டுட்டு வீட்டுக்கு போய்டுங்க..!! நெருக்கும் முன்னாள் கேப்டன்
Recommended Video
மும்பை: ஓய்வை தோனி விரைவில் அறிவித்துவிடலாம் என்று முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக கோப்பை முடிந்தது. அதில் இந்திய அணிக்கு கிடைத்த தோல்வி, அந்த தொடர் முடிந்தபின்னர் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பியதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அந்த தாக்கம் அடங்குவதற்குள் தோனியை அணியில் இருந்து கழற்றிவிட, பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதையறிந்த தோனி, ஓய்வை எடுத்துக் கொண்டு ராணுவ பயிற்சிக்கு சென்றுவிட்டு, வெற்றிகரமாக ஊர் திரும்பி விட்டார்.

தோனிக்கு நெருக்கடி
அடுத்து தென் ஆப்ரிக்கா தொடர் இந்தியாவுக்கு காத்திருக்கிறது. அந்த தொடரிலும் தோனி இல்லை. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், இந்த விவகாரம் தோனிக்கு பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது.

ஓய்வுக்கு அறிவுறுத்தல்
இதற்கு மேலும் தாமதிக்க வேண்டாம், பேசாமல் ஓய்வை அறிவித்து விடுங்கள் என்று தோனிக்கு பலரும் அறிவுறுத்தினர். தற்போது முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவும் தோனியை ஓய்வு பெற சொல்லியிருக்கிறார்.

இதுதான் தருணம்
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அணியின் தேர்வில் இப்போது தோனி என்பவர் ஒரு போட்டியாளராக நிர்வாகம் கருதவில்லை. இந்திய அணியில் தோனியின் பங்களிப்பு அளவிடமுடியாதது. அவர் விடைபெற வேண்டிய தருணம்.

தேர்வாளர்கள் பேச வேண்டும்
ஆகவே, அணி தேர்வாளர்கள் இது குறித்து அவரிடம் பேச வேண்டும். டி 20 உலக கோப்பைக்கு தோனி ரொம்ப அவசியமானவர் என்றால் அனைத்து போட்டிகளிலும் ஆட வைக்க வேண்டும். இல்லையென்றால் இது குறித்து ஆலோசித்து, 2 மாதங்களில் அதை செயல்வடிவமாக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications