Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோள்" மூட்டிய அமிதாப் பச்சன்.. ஹர்ஷா போக்ளே மீது சாட்டையை வீசிய பிசிசிஐ!

மும்பை: ஐபிஎல் 2016க்கான வர்னணையாளர் காண்டிராக்டிலிருந்து பிரபல கிரிக்கெட் வர்னணையாளர் ஹர்ஷா போக்ளேவை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் போட்ட ஒரு டிவிட்டை வைத்து போக்ளேவை தூக்கியுள்ளது பிசிசிஐ.

ஆனாலும் போக்ளே நீக்கத்தின் பின்னணியில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் இருப்பதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. போக்ளே குறித்து அவர்கள் வாரியத்திடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதால்தான் போக்ளேயை நீக்கும் முடிவுக்கு பிசிசிஐ வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போக்ளேவை வர்னணையாளர் பட்டியலிலிருந்து நீக்கியது குறித்து விளக்கம் அளிக்க கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் மற்றும் ஐபிஎல் தலைவர் ராஜவ் சுக்லா ஆகியோர் மறுத்து விட்டனர்.

உலகப் பிரபலம்

உலகப் பிரபலம்

ஹர்ஷா போக்ளே, கிரிக்கெட் வர்னணைக்கு புது உருவம், வடிவம் கொடுத்தவர். உலகப் புகழ் பெற்றவர். உலக அளவில் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களின் அன்பைப் பெற்றவர்.ஹர்ஷா போக்ளே, கிரிக்கெட் வர்னணைக்கு புது உருவம், வடிவம் கொடுத்தவர். உலகப் புகழ் பெற்றவர். உலக அளவில் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களின் அன்பைப் பெற்றவர்.

பட்டதைப் பேசும் படேல்!

பட்டதைப் பேசும் படேல்!

ஒரு ஆட்டத்தைப் பார்த்தோமோ, அதை அப்படியே வர்ணித்தோமா என்று போகாமல், மனதில் பட்டதை சொல்லக் கூடியவர் ஹர்ஷா படேல் போக்ளே. வீரர்கள் சரியாக விளையாடினால் அது யாராக இருந்தாலும் பாராட்டுவார். சரியாக விளையாவிட்டால் நாகரீகமாக விமர்சிப்பார்.

ஷாக்!

தனது நீக்கம் குறித்து போக்ளேவிடம் கருத்து கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது. இந்த செய்தி எனக்கு அதிர்ச்சி தருகிறது என்று மட்டும் அவர் தனது வழக்கமான மொச்சைப் பல் சிரிப்புடன் கூறினார்.

அமிதாப் பச்சன் டிவிட்டே காரணம்

இருப்பினும் ஹர்ஷா போக்ளே குறித்து நடிகர் அமிதாப் பச்சன் போட்ட ஒரு டிவிட்தான் அவரது நீக்கத்திற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. போக்ளே பெயரைக் குறிப்பிடாமல் (ஆனால் அவரைத்தான் விமர்சித்திருந்தார்) அமிதாப் போட்ட டிவிட்டில், பிற வீரர்களை மட்டுமே புகழாமல், நமது வீரர்களைய அதிகம் புகழும் நல்லதொரு இ்ந்திய வர்னணையாளர் நம்மிடம் இருந்தால் மிகவும் நல்லது என்று கூறியிருந்தார் அமிதாப்.

ரீடிவீட் செய்த டோணி

இந்த டிவிட்டை உடனடியாக டோணி ரீடிவீட் செய்து, இதற்கு மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று போட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான் போக்ளே நீக்கப்பட்டுள்ளார்.

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது போக்ளே வர்னணை செய்த விதம்தான் சர்ச்சைக்குக் காரணம் என்கிறார்கள். குறிப்பாக இந்தியா - வங்கதேசப் போட்டியின்போது வங்கதேச வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக போக்ளே கூறியதுதான் அமிதாப்பை கோபப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

தப்புதான்.. ஆனால் குற்றமில்லையே

உண்மையில் நமது வெற்றியைப் புகழாமல், வங்கதேச வீரர்களை ஓவராக போக்ளே புகழ்ந்து பேசியிருந்தால் அது தப்புதான். அதேசமயம், நன்றாக விளையாடியவர்கள் - அது யாராக இருந்தாலும் - அவர்களைப் புகழ்வது தவறில்லையே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

எல்லா நாட்டிலும் பார்ப்பார்களே

இந்த விவகாரம் குறித்து போக்ளே விவரித்துப் பேசுகையில் கிரி்க்கெட் வர்னணை என்பது இந்தியாவுடன் நின்று விடுவதில்லை. மாறாக, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா என எல்லா நாடுகளுக்கும் போகிறது.

நடுநிலை தேவை

நடுநிலை தேவை

அப்படிப்பட்ட சமயத்தில் அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் பொதுவான முறையில்தான் விமர்சனம் இருக்க முடியும். அனைத்தும் சம நிலையில் இருக்க வேண்டும். இந்தியாவை மட்டுமை மையப்படுத்தி பேசிக் கொண்டிருந்தால் அது நியாயமற்றதாகவே இருக்கும்.

வங்கதேசத்தவர் ஏமாறுவார்கள்

வங்கதேசத்தவர் ஏமாறுவார்கள்

இந்தியா வங்கதேசப் போட்டியில் இந்தியா வென்றது ஒருபக்கம் இருந்தாலும், வங்கதேச வீரர்கள் சிறப்பாக விளையாடியதையும் யாரும் மறுக்க முடியாது. அதுகுறித்து நாம் கூறுவதை வங்கதேச ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்றார் போக்ளே.

ஜடேஜா அதிருப்தி

இதற்கிடையே ஹர்ஷா நீக்கப்பட்டது குறித்து குஜராத் லயன்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டில், ஹர்ஷா போக்ளே இல்லாத கிரிக்கெட் கமெண்ட்ரி, விராத் கோஹ்லி இல்லாத இந்திய அணி போல என்று கூறியுள்ளார். போக்ளேவும், ஜடேஜாவும் குஜராத் மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப்புக்கு அவ்வளவு சக்தியா?

அமிதாப்புக்கு அவ்வளவு சக்தியா?

அமிதாப் பச்சன் ஒரு டிவிட் போட்டதுமே போக்ளேவை கிரிக்கெட் வாரியம் தூக்குகிறது என்றால் அந்த அளவுக்கு கிரிக்கெட்டிலும் அமிதாப் சக்தி வாய்ந்தவராக மாறியிருக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

Story first published: Monday, April 11, 2016, 18:09 [IST]
Other articles published on Apr 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+