Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 5வது டெஸ்டில் சீனியருக்கு ஏமாற்றம்!!

பெர்மிங்கம்: இந்தியா அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி பெர்மிங்கம் நகரத்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஓப்பனிங்கிற்கு யார்?

ஓப்பனிங்கிற்கு யார்?

இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டுள்ளார். சுப்மன் கில்லுடன் யார் ஓப்பனிங் ஆடுவார் என்ற பெரும் குழப்பத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் புஜாரா சேர்க்கப்பட்டிருக்கிறார். முதல் விக்கெட்டிற்கு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

இங்கிலாந்து அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ள சூழலில் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியுள்ளது. அதிலும் ஒரு ஸ்பின்னருக்கான இடத்தில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் ரவீந்திர ஜடேஜாவுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

எட்ஜ்பாஸ்டன் களத்தை பொறுத்தவரையில் ஆட்டத்தின் முதல் நாளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைக்கும். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனினும் புஜாரா ஓப்பனிங்கில் இருப்பதால், இந்திய அணியின் சுவராக நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 1, 2022, 15:13 [IST]
Other articles published on Jul 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+