Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். அணியில் மீண்டும் இணையும் அந்த மூத்த வீரர்.. ஏன் விடுமுறை என அறிவிக்காத கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சோயிப் மாலிக், 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இணைய இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒரு 20 ஓவர் கிரிக்கெட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்கிறது. 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. உலக கோப்பைக்கு முந்தைய தொடர் என்பதால் இரு அணிகளும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கின்றன.

Senior player shoaib malik to rejoin pakistan team pcb announces

இந்நிலையில் இத்தொடருக்காக இங்கிலாந்து சென்ற சோயிப் மாலிக்கிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு 10 நாட்கள் விடுமுறை அளித்தது. என்ன காரணத்துக்காக அவருக்கு விடுமுறை அளித்தது என்பது அறிவிக்கப்பட வில்லை.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அவர் மீண்டும் இணைவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 9ம் தேதி அவர் அணியில் தம்மை இணைத்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 11ம் தேதி நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் கலந்து கொண்டு விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 282 ஒருநாள், 111 டி- 20 ஓவர் போட்டிகளில் சோயிக் மாலிக் விளையாடி இருக்கிறார். உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருக்கும் அவர், அந்த தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.

Story first published: Wednesday, May 8, 2019, 21:56 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+