Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களை ஏன் குறை சொல்றீங்க.. அவர் மீது ஆக்சன் எடுங்க.. செம கடுப்பில் ரோஹித் சர்மா.. பரபரப்பு பின்னணி

சென்னை: இந்திய அணியில் ரோஹித் சர்மா உள்ளிட்ட சில மூத்த வீரர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் நீக்கப்படலாம் என்று வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி பெரிய அளவில் வீரர்கள் இடையே பிரிவை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது டெஸ்டில் அணியில் நிறைய மாற்றம் ஏற்படும் என்கிறார்கள்.

முக்கியமான பல வீரர்கள் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.

நீக்கம்

நீக்கம்

இந்திய அணியில் ரோஹித் சர்மா உள்ளிட்ட சில மூத்த வீரர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் நீக்கப்படலாம் என்று வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரஹானே, ரோஹித் சர்மா, நதீம் உள்ளிட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் இவர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ராகுல்

ராகுல்

ராகுல், மயங்க் அகர்வால், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள். இதனால் இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலர் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக ரோஹித் சர்மா கோலியின் கேப்டன்சி மீது கோபமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

 கோலி

கோலி

கேப்டன் கோலி சரியாக செயல்படுவது இல்லை. அவரின் பீல்டிங் செட்டப், பவுலிங் ரொட்டேஷன் சரியில்லை. அப்படி இருக்கும் போது வீரர்கள் என்ன செய்ய முடியும். இங்கிலாந்து அணியை 578 ரன்கள் அடிக்கவிட்டது அவர் தவறு. 3வது நாள் பேட்டிங் இறங்கும் ஓப்பனிங் வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள்.

பாதிப்பு

பாதிப்பு

அவர்களுக்கு பிரஷர் அதிகம் ஆனது. அப்படி இருக்கும் போது பேட்ஸ்மேன்கள் மீது குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று ரோஹித் சர்மா கருதுவதாக கூறப்படுகிறது. அதுபோல் எப்போதும் கோலிக்கு ஆதரவாக இருக்கும் பிசிசிஐ அமைப்பும் கூட இந்த முறை கோலி மீது கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறது என்கிறார்கள்.

கோபம்

கோபம்

ரஹானேவிற்கு கீழ் வீரர்கள் ஆடியது போல கோலிக்கு கீழ் ஆடுவது இல்லை. இதை விசாரிக்க வேண்டும். கோலியின் கேப்டன்சி குறித்து விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று பிசிசிஐ கருதுகிறது. வீரர்கள் சிலரும் கூட இதே கருத்தை முன் வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Thursday, February 11, 2021, 16:00 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+