மொத்தமாக முடக்கிவிட்டது.. இந்திய அணிக்குள் சிக்கலில் மாட்டிய மூத்த வீரர்கள்.. என்ன நடந்தது?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் இன்னும் மொத்தமாக முடியாத நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இந்திய அணியில் இடம்பெறாத இன்னும் சில வீரர்களும் காயம் அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகில் இந்திய அணி முக்கியமான இடத்தில் உள்ளது. இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் பிட்னஸ் தொடங்கி பயிற்சி என்று பல கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியில் இருக்கும் முக்கியமான வீரர்கள் பலர் வரிசையாக காயம் அடைந்து வருகிறார்கள்.

காயம்
அதன்படி ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்திய அணியின் மூத்த வீரர்கள் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா காயம் அடைந்தனர். புவனேஷ்வர் குமார் ஐபிஎல் தொடரின் போதும், இஷாந்த் சர்மா அதற்கு முன்பே ஐபிஎல் தொடர் பயிற்சியின் போதும் காயம் அடைந்தனர்.

இசாந்த் காயம்
அதன்பின் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்ட போது இந்திய அணியின் இளம் வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வாய்ப்பை இழந்தார். இதெல்லாம் போக ஆஸ்திரேலிய தொடரின் போதே சைனி காயம் அடைந்தார். ஆனாலும் சைனி இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

உமேஷ் யாதவ்
சில நாட்களுக்கு முன் இந்திய அணியின் மூத்த வீர்ர் சமி காயம் அடைந்தார். பேட்டிங் செய்யும் போது கையில் பந்து பட்டு இவருக்கு எலும்பு முறிந்தது. இதனால் இவர் இங்கிலாந்து தொடரில் கலந்து கொள்வதும் சிக்கலாகி உள்ளது. இதுபோக தற்போது உமேஷ் யாதவும் காயம் அடைந்துள்ளார்.

மோசம்
காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் போன ரோஹித் சர்மா மட்டுமே காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்திய அணியின் பெரும்பாலான முக்கிய வீரர்கள் எல்லோரும் காயம் காரணமாக இப்படி முடங்கி உள்ளனர். கொரோனா காரணமாக பலர் கிரிக்கெட் ஆட முடியாத நிலையில் தற்போது காயமும் இவர்களை முடக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications