சீனியர் வீரர்களின் ஆத்திரம்.. சேத்தன் சர்மா பதவி விலகியது புது ட்விஸ்ட்.. பிசிசிஐ-க்கு பறந்த கடிதம்!
மும்பை: இந்திய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா விவகாரத்தில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கடும் ஆத்திரத்தில் இருப்பதாகவும், இதுகுறித்த தங்களது பதில்களை கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் கடந்த சில நாட்களாக சேத்தன் சர்மா வெளியிட்ட தகவல்கள் தான் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ இன்னும் மௌனம் காத்து வரும் சூழலில் அவர் பதவி விலகிவிட்டார்.
சேத்தன் சர்மா தனது செயலுக்காக நேற்றிரவு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இதனை சற்றும் யோசித்துப்பார்க்காமல் ஜெய் ஷா ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

பதவி விலகல்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். 3வது மற்றும் 4வது டெஸ்டிற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதே போல ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த சூழலில் தான் சேத்தன் சர்மா விலகியுள்ளார்.

புது தகவல்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது சேத்தன் சர்மா மீது விசாரணை கமிஷன் ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்க பிசிசிஐ யோசித்துள்ளது. அப்படி நடந்தால் சேத்தன் சர்மா தொடர்ந்து பணி செய்வார். ஆனால் அவருடம் மீண்டும் ஒன்றாக அமைந்து பணிபுரிய விருப்பம் இல்லை என ரோகித் சர்மா,ஹர்திக் பாண்ட்யா, விராட் கோலி போன்றவர்கள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்
ரோகித் சர்மா, தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தனது வீட்டிற்கு வந்து அடிக்கடி எதிர்காலம் குறித்து பேசுவார்கள் என சேத்தன் சர்மா கூறியிருந்தார். எனவே அவர் மீது இனியும் நம்பிக்கை இல்லை என வீரர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் தான் இனி எதுவும் செய்ய முடியாது என சேத்தன் சர்மா ராஜினாமா செய்திருக்கிறார்.

தேர்வு முறை எப்படி?
இதனையடுத்து தேர்வுக்குழுவில் மீதமுள்ள 4 அதிகாரிகளும் சேர்ந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இவர்களெல்லாம் இணைந்து அடுத்த 2 போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் தற்போது விளையாடி வரும் வீரர்களே தான் அதிலும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications