Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இவரை நம்பி அணியில் எடுத்ததற்கு.. நல்லா வேணும்".. தப்ப வழியின்றி சிக்கிய கோலி.. மோசமான முடிவு!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது . இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். இங்கிலாந்தின் ஜோ ரூட் - சிப்லி அதிரடி பார்ட்னர்ஷிப் ஆட்டம் ஆடி வருகிறார்கள்.

இங்கிலாந்து அணி 69 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. சிப்லி 64, ஜோ ரூட் 70ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

எதிராக மாறி உள்ளது

எதிராக மாறி உள்ளது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்திய அணிக்கே தற்போது இந்த முடிவு தற்போது எதிராக திரும்பி உள்ளது. இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் இங்கிலாந்துக்கு எதிராக விக்கெட் எடுப்பார்கள் என்று கருதப்பட்டது.

சென்னை

சென்னை

முக்கியமாக சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச். இதனால் சென்னையில் இந்திய ஸ்பின் பவுலர்கள் எளிதாக விக்கெட் எடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதனால்தான் கோலியும் கூட இந்திய அணியில் இன்று மூன்று ஸ்பின் பவுலர்களை களமிறங்கினார்.

எப்படி

எப்படி

இன்று அக்சர் பட்டேல் காயம் காரணமாக ஆடவில்லை. முறைப்படி குல்தீப் யாதவை கோலி களமிறக்கி இருக்க வேண்டும். ஆனால் கோலி இன்று 15 பேர் அணியிலேயே இல்லாத சபாஷ் நதீமை அணிக்குள் கொண்டு வந்து ஆட வைத்தார். ஆனால் இன்று நதீம் சரியாக பவுலிங் செய்யவில்லை.

லைன்

லைன்

நல்ல லைனில் இவர் பவுலிங் செய்தார். ஆனாலும் கடைசி வரை ஒரே மாதிரி பவுலிங் செய்தார். கொஞ்சம் கூட இவரின் பவுலிங்கில் வேறுபாடு இல்லை . இடதுகை ஆர்தடாக்ஸ் பவுலர் என்பதால் இவர் அணியில் எடுத்தனர். ஆனால் தான் அணியில் எடுக்கப்பட்டதற்கான நியாயத்தை நதீம் செய்யவில்லை.

குல்தீப்

குல்தீப்

இவரின் பவுலிங்கில் இதனால் அடிக்கடி பவுண்டரிகளும் சென்றது. இவருக்கு பதிலாக இன்று குல்தீப் இருந்திருந்தால் ஒருவேளை அனுபவம் காரணமாக சிறப்பாக ஆடி இருப்பார். அனுபவம் காரணமாக சிறப்பாக விக்கெட் எடுத்து இருப்பார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால் குல்தீப் யாதாவிற்கு கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை. யாதவை கோலி நம்பவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது . ஆனாலும் நதீம் தேர்வு இந்திய அணிக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, February 5, 2021, 16:16 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+