Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து துரத்தும் தோல்விகள்... தரவரிசையில் 3வது இடத்திற்கு இறங்கிய ஷெபாலி வர்மா

டெல்லி : ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெறும் 2 ரன்களை மட்டுமே அடித்துள்ள இளம் சூறாவளி ஷெபாலி வர்மா, இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி இந்தியா தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 தரவரிசையில் ஷெபாலி வர்மா 3வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார்.

இறுதிப்போட்டியில் அவுட்டாகாமல் 78 ரன்களை அடித்துள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி இந்த பட்டியயில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

3வது இடத்திற்கு இறங்கிய ஷெபாலி

3வது இடத்திற்கு இறங்கிய ஷெபாலி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் மெல்போர்னில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பல்வேறு மாறுதல்களை ஐசிசி டி20 தரவரிசையிலும் ஏற்படுத்தியுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் வெளியிடப்பட்ட டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த இந்திய இளம் சூறாவளி ஷெபாலி வர்மா தற்போது இரண்டு இடங்கள் கீழறங்கி 3வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த போட்டியில் இவர் 2 ரன்களை மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2 இடங்கள் முன்னேற்றம்

2 இடங்கள் முன்னேற்றம்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் 78 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய துவக்க வீராங்கனை பெத் மூனி, 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.

இவர் கடந்த தொடரின் 6 போட்டிகளில் விளையாடி, 259 ரன்களை குவித்துள்ளார்.

ஸ்மிரிதி, ஜெமிமா 7வது 9வது இடம்

ஸ்மிரிதி, ஜெமிமா 7வது 9வது இடம்

இதனிடையே மூனியுடன் கைகோர்த்து விளையாடிய அலிஸா ஹீலி, இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் 750 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய இரட்டையர்கள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முறையே 7வது மற்றும் 9வது இடத்தில் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர் தீப்தி அபாரம்

ஆல்-ரவுண்டர் தீப்தி அபாரம்

இதனிடையே இந்தியாவின் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, 10 இடங்கள் முன்னேறி, பேட்டிங்கில் 43வது இடத்தில் உள்ளார். ஆனால் ஆல்-ரவுண்டர் கேட்டகரியில் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளார். பௌலிங்கில் 6வது இடத்தையும் தீப்தி ஷர்மா பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ராதா யாதவ், பூனம் யாதவ் உள்ளனர்.

2வது இடத்தில் மேகன் ஷட்

2வது இடத்தில் மேகன் ஷட்

பௌலர்கள் பிரிவில் முதலிடத்தை இங்கிலாந்தின் சோப்பி எக்லஸ்டோன் பிடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த நிலைகளில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட், தென்னாப்பிரிக்காவின் சப்நிம் இஸ்மாயில் ஆகியோர் உள்ளனர். நேற்றைய போட்டியில் கலக்கிய ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனாசன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Monday, March 9, 2020, 17:55 [IST]
Other articles published on Mar 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+