For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் டாம் குரூஸ்.. அதுக்கும் மேல.. ஷாருக் பிறந்தநாள்.. மார்கன் பாராட்டு

டெல்லி : இந்தியாவின் டாம் குரூஸ் என்று புகழப்படும் ஷாருக்கான் தன்னுடைய 55வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

அவருக்கு கேகேஆர் அணி, கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷாருக்கான் டாம் குரூசை விட மிகவும் உற்சாகமானவர் என்று கேகேஆர் அணியின் இயான் மார்கன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் 55வது பிறந்தநாள்

ஷாருக்கான் 55வது பிறந்தநாள்

கேகேஆர் அணியின் ஒரு உரிமையாளரான ஷாருக்கான் தன்னுடைய 55வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி கேகேஆர் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதேபோல பல கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

குரூசை விட உற்சாகமானவர்

கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன், இந்தியாவின் டாம் குரூஸ் என ஷாருக்கானை அனைவரும் பாராட்டுவதை சுட்டிக் காட்டி, ஆனால் அவர் டாம் குரூசை விட உற்சாகமானவர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேகேஆர் அணி அந்த அணி வீரர்களின் வாழ்த்துக்களை கோர்த்து வீடியோவாக வெளியிட்டுள்ளது.

முழுமை பெறாது

முழுமை பெறாது

ஷாருக் இல்லாமல் கேகேஆர் அணி முழுமை பெறாது என்று கேகேஆர் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அணியின் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஷாருக் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து இதேபோன்ற அதிசயமான மனிதராகவே இருக்க வாழ்த்தியுள்ளார்.

கவுதம் கம்பீர் வாழ்த்து

இதேபோல முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின்மூலம் ஷாருக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். முன்னாள் கேகேஆர் கேப்டன் மற்றும் இந்திய துவக்க வீரர் கௌதம் கம்பீரும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ரொமான்ஸ் கிங் என வாழ்த்து

இதனிடையே முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் டிவிட்டர் மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ரொமான்ஸ் கிங் மற்றும் பல்லாயிரம் இதயங்களை ஆளும் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை கேகேஆர் அணி வெற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 2, 2020, 18:13 [IST]
Other articles published on Nov 2, 2020
English summary
Wishing the King of romance and the ruler of a billion hearts a very Happy Birthday -Yuvraj
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+