Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாரூக் நடத்திய ஜாலி சுயம்வரம்... நடிகை அனுஷ்காவை மனைவியாக தேர்வு செய்த கோஹ்லி

அபுதாபி: அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் விருந்தில் நடிகர் ஷாரூக்கான் நடத்திய ஜாலியான சுயம்வரம் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா ஷர்மாவை தனது மனைவியாக தேர்வு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் விராத் கோஹ்லி.

7-வது ஐ.பி.ல். கிரிக்கெட் தொடக்க விழாவுக்கு பதிலாக இம்முறை அபுதாபியில் பிரமாண்ட விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நட்சத்திர உணவு விடுதியில் நடந்த இந்த விருந்து கொண்டாட்டத்தில் 8 அணிகளின் கேப்டன்களும் மேடையில் தோன்றி வழக்கம் போல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்தி நடிகை தீபிகா படுகோனே தான் நடித்த பல்வேறு படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு கலக்கலாக நடனமாடி உற்சாகப்படுத்தினார். நடிகர் ஷாரூக்கானும் லுங்கி டான்ஸ் ஆடி கலக்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வாட்சன் கிதார் வாசித்தபடி பாட்டு பாடினார்.

விருந்தின் ஹைலைட்டாக சுவாரஸ்யமான சுயம்வரம் ஒன்றை நடத்தினார் நடிகர் ஷாரூக்கான்.

நவீன சுயம்வரம்...

நவீன சுயம்வரம்...

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராத் கோஹ்லியை மேடைக்கு அழைத்து வித்தியாசமான சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் நடிகர் ஷாரூக்கான்.

காதல் விடு தூது...

காதல் விடு தூது...

அதில், சமுக வலைதளங்கள் மூலம் விராட் கோலிக்கு, வந்த ஏராளமான காதல் அழைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பெண்களின் புகைப்படங்களை ஷாரூக்கான் அவரிடம் காண்பித்தார்.

இவர்களில் யார் உங்கள் மனைவி...

இவர்களில் யார் உங்கள் மனைவி...

இவற்றில், உங்களுக்கு பிடித்தமான பெண்ணை வாழ்க்கை துணைவியாக தேர்வு செய்து கொள்ளுங்கள் கோஹ்லி எனத் தெரிவித்தார் ஷாரூக்.

யார் அந்த தேவதை...

யார் அந்த தேவதை...

பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவோடு விளம்பரங்களில் இணைந்து தோன்றி வருகிறார் கோஹ்லி. இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் தற்போதைய சுயம்வரத்தில் யாரை தன் காதல் தேவதையாக கோஹ்லி தேர்ந்தெடுப்பார் என அங்கிருந்த அனைவருக்கும் ஆவல்.

அனுஷ்கா தான் என் மனைவி...

அனுஷ்கா தான் என் மனைவி...

ஆனால், கோஹ்லியோ சிறிதும் தயக்கமோ தடுமாற்றமோ இன்றி இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் படத்தையே தேர்வு செய்தார்.

புன்னகையே சம்மதத்திற்கு அடையாளம்...

புன்னகையே சம்மதத்திற்கு அடையாளம்...

அதனைத் தொடர்ந்து அந்த புகைப்படம் அவரது கழுத்தில் அணிவிக்கப்பட்டது. புன்னகையையே பதிலாக தந்த கோஹ்லி, கருத்து எதுவும் கூறவில்லை.

வேடிக்கையாக காதலைச் சொன்ன கோஹ்லி...

வேடிக்கையாக காதலைச் சொன்ன கோஹ்லி...

வேடிக்கையான சுயம்வர நிகழ்ச்சியில் அனுஷ்கா ஷர்மாவை தனது வருங்கால மனைவியாக கோஹ்லி பகிரங்கமாக வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Thursday, April 17, 2014, 13:24 [IST]
Other articles published on Apr 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+