இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளர் மிதாலி ராஜ்தான்.. யாருடைய ஐடியா தெரியுமா!
டெல்லி : இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக மிதாலி ராஜ் வரவேண்டும் என்று ஷாருக்கான் கோரிக்கை வைத்து இருக்கிறார். உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் மிதாலி ராஜை பார்த்து இப்படி கூறியிருக்கிறார்.
ஷாருக்கானின் அந்த கோரிக்கைக்கு மிதாலி ராஜும் ஓகே சொல்லி இருக்கிறார். பெண்கள் அணியில் தனித்து தெரியும் இவருக்கு ஷாருக்கான் இதன் மூலம் பெரிய மரியாதையை வழங்கி உள்ளார்.
அதே சமயத்தில் ஏன் இந்திய அணிக்கு உண்மையாகவே இவர் பயிற்சியாளராக வர கூடாது என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சாதனை நாயகி
இந்திய பெண்கள் அணியின் கோஹ்லி என்று மிதாலி ராஜை கண்டிப்பாக சொல்ல முடியாது. ஏனென்றால் இவர் கொஞ்சம் அதுக்கும் மேல். தற்போது உலகில் உள்ள எல்லா பெண்கள் அணியிலும் சிறந்த வீராங்கனை யார் என்று கேட்டால் கண்டிப்பாக மிதாலி பெயரை சொல்லலாம். சச்சின் கையால் 'பேட்' பரிசு பெற்ற ஒரே பெண்கள் அணி வீராங்கனை இவர் மட்டுமே.

டெட் எக்ஸ் உரையாடல்
டெட் எக்ஸ் நடத்திய ஒரு உரையாடல் நிகழ்வில் இவர் கலந்து கொண்டார். அங்கு நிறைய பிரபலங்கள் பார்வையாளராக இருந்தனர். இதில் இவர் தன்னுடைய வாழ்க்கையிலும் கிரிக்கெட் உலகிலும் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார். எப்போதும் புத்தகங்கள்தான் தன்னை சந்தோசமாக வைத்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

ஷாருக்கான்
இந்த உரையாடலில் பார்வையாளராக இருந்த ஷாருக்கான் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்டார். கடைசியாக மிதாலி ராஜை பார்த்து ''நீங்கள் தான் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டும். உங்களால் இருக்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

ஏன் முடியாது
இதற்கு பதில் அளித்த மிதாலி ராஜ் "ஏன் இல்லாமல். என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்வேன். களத்தில் நீங்கள் நிற்கும் போது எல்லோரும் உங்களைத்தான் பார்ப்பார்கள். அப்போது உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். அந்த பொறுப்புணர்வு இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications