Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி அடிச்சா எப்படி போடுறது?.. அதான் அப்படி செய்தேன் - புலம்பும் ஷாபாஸ் நதீம்

சென்னை: இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்தது. கேப்டன் ஜோ ரூட் எந்தவித பிரஷரும் இன்றி, இந்திய பவுலர்களை ஸ்வீப் ஷாட்ஸ்களால் வேதனைப்படுத்தினார்.

சேப்பாக்கம் பிட்ச் ஃபிளாட் டிராக்காக உருவாக்கப்பட்டது இந்தியாவுக்கே அதிர்ச்சி ரகம் தான். இது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக, இந்திய பவுலர்களுக்கோ சோதனையாகிப் போனது. குறிப்பாக ஸ்பின்னர்கள் படாதபாடுபட்டுப் போனார்கள். தலைவன் அஷ்வினால் கூட இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸின் கவுண்ட்டர் அட்டாக் குறித்து ஷாபாஸ் நதீம் பேசியுள்ளார்.

 இவ்வளவு ரிவர்ஸ் ஸ்வீப் ஆகாது

இவ்வளவு ரிவர்ஸ் ஸ்வீப் ஆகாது

"நான் ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே பந்துவீசவே முயற்சி செய்தேன். ஆனால் எனது பந்துகளை பென் ஸ்டோக்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் counter-attack செய்துவிட்டார். அதன் காரணமாகவே, எனது லைன் அண்ட் லெந்தில் சிறிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

 இன்னும் பயிற்சி வேண்டும்

இன்னும் பயிற்சி வேண்டும்

ஆறு நோ பால் வீசிவிட்டேன். டெக்னிக்கலாக இருந்த சிக்கல்களே அதற்கு காரணம். பந்து வீசும்போது, கொஞ்சம் மெதுவாக ஜம்ப் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தை இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும். அது தான் பிரச்சனையாகிவிட்டது.

 இப்போ பரவாயில்லை

இப்போ பரவாயில்லை

முதல் நாளில், இந்த பிரச்சனையால் ரொம்பவே சிரமப்பட்டேன். இரண்டாம் நாளில் கொஞ்சம் பரவாயில்லை. மீண்டும் வலைப்பயிற்சிக்கு சென்று எனது இந்த குறைப்பாட்டை நான் சரி செய்தே ஆக வேண்டும்.

 உஷாராகவே இருந்தேன்

உஷாராகவே இருந்தேன்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், எந்த நேரம் வேண்டுமானாலும் அழைக்கப்படுவேன் என்று முன்னரே தெரியும். மனரீதியாக நான் தயாராகவே இருந்தேன். என்னிடம் கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. முந்தைய நாளே என்னிடம் தகவல் சொல்லிவிட்டார்கள்.

 ஒழுங்கா வீசலைன்னா கஷ்டம்

ஒழுங்கா வீசலைன்னா கஷ்டம்

இந்த சென்னை பிட்சில் நீங்கள் சரியான இடத்தில் பந்து வீசியே ஆக வேண்டும். விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்து அதிக ரிஸ்க் எடுத்தால், ரன்கள் தான் லீக் ஆகும். சரியான லெந்த்தில் பந்து வீசி, பேட்ஸ்மேன்கள் தவறிழைக்கும் தருணத்திற்காக காத்திருக்க வேண்டும்.

 நாமும் அடிப்போம்

நாமும் அடிப்போம்

பிட்ச் இன்னமும் பேட்டிங்கிற்கு ஆதரவாகவே உள்ளது. ஆகையால், நமது இந்திய பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்கத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் விக்கெட்டை ஷாபாஸ் நதீம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்தியா, 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 13:31 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+