For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஹசாரே போட்டியில் உலக சாதனை.. 20 ஆண்டு பந்துவீச்சு ரெக்கார்டு முறியடிப்பு

சென்னை : ஜார்கண்ட் அணியின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் நேற்று லிஸ்ட் "ஏ" போட்டிகளில் புதிய சாதனை படைத்தார்.

விஜய் ஹசாரே தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பல மாநிலங்கள் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது.

Shahbaz Nadeem broken reocrd of List A bowling against Rajasthan

இதில் சென்னையில் நடந்து வரும் போட்டியில், ராஜஸ்தான், ஜார்கண்ட் அணிகள் ஆடின. இந்த போட்டியில் ஜார்கண்ட் அணியின் ஷாபாஸ் நதீம் சிறப்பாக பந்துவீசினார்.

இவர் தான் வீசிய 10 ஓவர்களில், 4 மெய்டன் ஓவர்கள் வீசி, 8 விக்கெட்கள் விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். மேலும், வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இவரது 10-4-10-8 என்ற பந்துவீச்சு, லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிகபட்ச சாதனையாகும். அதிக விக்கெட்கள் வீழ்த்தி குறைந்த ரன்கள் கொடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் நதீம்.

இதற்கு முன் சிறந்த பந்துவீச்சை நிகழ்த்தியவர் டெல்லி அணியின் ராகுல் சங்வி. அவர் 15 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த சாதனை 1997-98 இல் நிகழ்த்தப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் இருக்கிறார். அவர் 19 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 73 ரன்களுக்கு சுருண்டது. நதீம் இந்தியா "ஏ" அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

Story first published: Thursday, September 20, 2018, 15:42 [IST]
Other articles published on Sep 20, 2018
English summary
Shahbaz Nadeem broken reocrd of List A bowling against Rajasthan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+