Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் டெஸ்ட் அணியிலிருந்து ஷாஹின் ஆப்ரிடி அதிரடி நீக்கம்!5 விக்கெட் வீழ்த்திய பிறகும் நடவடிக்கை

லாகூர்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நௌமான் அலி மற்றும் இளம் பேட்ஸ்மேன் சவூத் ஷகீல் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சவூத் ஷகீல் உடற்தகுதி காரணங்களால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சேர்க்கப்படவில்லை என்றும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குள் அவர் குணமடைவார் என்று நம்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

Shaheen afridi

அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி மற்றும் ஆல்-ரவுண்டர் அமீர் ஜமால் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நசீம் ஷா மற்றும் ஹுனைன் ஷா ஆகியோரின் தம்பியான இளம் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா முதல்முறையாக சர்வதேச பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார். அவருடன் இணைந்து, 2026-27 குவைத்-இ-அசாம் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான் மற்றும் முகமது அவாய்ஸ் ஜாபர் ஆகியோரும் முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமனம்.. அதிரடி அறிவிப்பு

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமனம்.. அதிரடி அறிவிப்பு

ஷஹீன் ஷா அப்ரிடி கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி, அதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும், இரண்டாவது போட்டியில் அவருக்குப் பதிலாக குர்ரம் ஷாஜாத் சேர்க்கப்பட்டார். குர்ரம் ஷாஜாத் அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் அவர் அணியில் நீடிக்கப்பட்ட நிலையில், ஷஹீன் அப்ரிடி டெஸ்ட் அணியில் இருந்தே முழுமையாக நீக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND vs ENG: 2 ஃபிரீ ஹிட் பந்தில் 12 ரன்கள் தருவது ரொம்ப தப்பு.. சக வீரரை சாடிய இசான் கிஷன்

IND vs ENG: 2 ஃபிரீ ஹிட் பந்தில் 12 ரன்கள் தருவது ரொம்ப தப்பு.. சக வீரரை சாடிய இசான் கிஷன்

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான பாக். டெஸ்ட் அணி பாபர் அசாம் (கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஃபசல், அலி உஸ்மான், அசான் அவாய்ஸ், இமாம் உல் ஹக், குர்ரம் ஷாஜாத், முகமது அப்பாஸ், முகமது அலி, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது அவாய்ஸ் ஜாபர், முகமது காசி கௌரி, சஜித் கான், சல்மான் அலி ஆகா, ஷான் மசூத் மற்ரும் உபைத் ஷா ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது.

Story first published: Sunday, July 5, 2026, 15:44 [IST]
Other articles published on Jul 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+