Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகள்.. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்துவீசிய ஷாகின் ஆப்ரிடி.. இங்கி. சம்பவம்

நாட்டிங்காம் : இங்கிலாந்தில் நடைபெற்ற Vitality blast டி20 தொடரில் நாட்டிங்காம், பிர்மிங்காம் மோதிய ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த ஆட்டத்தில் நாட்டிங்காம் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஆப்ரிடி முதல் ஓவரிலேயே சம்பவம் செய்தார்.

டாஸ் வென்ற பிர்மிங்காம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நாட்டிங்காம் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் 4 ரன்களில் வெளியேற, ஜோ கிளார்க் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜேம்ஸ் 37 ரன்களிலும், ஸ்டிவன் முல்லானி 5 ரன்களிலும், இமாத் வசீம் 2 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, தனி ஆளாக நின்று டாம் மூர்ஸ் மட்டும் 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற நாட்டிங்காம் அணி 168 ரன்களில் வெளியேறியது.

Shaheen afridi historic first over went vain in Vitality blast t20

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பிர்மிங்காம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. நாட்டிங்காம் அணி சார்பாக களமிறங்கிய ஷாகின் ஆப்ரிடி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஓவரை வீசினார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் ஆப்ரிடி, அனலை கக்கும் அளவுக்கு வேகத்தில் யாக்கர் பந்துகளை வீசினார்.

முதல் பந்து மற்றும் இரண்டாவது பந்திலும் மற்றும் 5வது பந்து , 6வது பந்திலும் ஷாகின் ஆப்ரிடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 2 போல்ட் மற்றும் ஒரு எல்பிடபிள்யூ அடங்கும். இதனால் 7 ரன்களை எடுப்பதற்குள் பிரிம்ங்காம் அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

டி20 கிரக்கெட்டின் முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஷாகின் ஆப்ரிடி சாதனை படைத்தார். எனினும் ஷாகின் ஆப்ரிடி கொடுத்த இந்த அபார தொடக்கத்தை மற்ற பவுலர்கள் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

எனினும் தொடக்க வீரர் ராப் யாட்ஸ் பொறுப்புடன் விளையாடி 46 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஜாக்கப் மற்றும் ஜேக்ஸ் தலா 27 ரன்கள் சேர்க்க பிர்மிங்காம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு பிர்மிங்காம் அணி தகுதி பெற்றது.

Story first published: Saturday, July 1, 2023, 15:25 [IST]
Other articles published on Jul 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+