பாக்.வீரருக்கு இப்படி ஒரு வன்மமா? வங்கதேச வீரரை பொளுக்கென அடித்த சம்பவம்.. சுருண்டு விழுந்ததால் பரபர
டாக்கா: டி20 போட்டியின் போது வங்கதேச வீரர் அஃபிஃப் ஹொசேனுக்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரீடி பொளேர் என்று கொடுத்த அடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்த பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மோசமான தொடக்கம்
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிதான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவருமே பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். சாண்டோ மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பரபர சம்பவம்
இந்நிலையில் வங்கதேச அணி பேட்டிங்கின் போது சாஹீன் அஃப்ரிடி செய்த விஷயம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த அணியின் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் அதிரடியுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். ஆட்டத்தின் 3வது ஓவரை சாஹீன் அஃப்ரிடி வீச முதல் பந்திலேயே அஃபிஃப் சிக்ஸர் பறக்கவிட்டு இன்னிங்ஸை தொடங்கினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அஃப்ரிடி அடுத்த பந்திலேயே பதிலடி கொடுத்தார்.

காயம் ஏற்படுத்திய அஃப்ரிடி
அடுத்த பந்தை குட் லென்ந்தாக வீசிய போது அதனை அஃபிஃப் தடுப்பாட்டம் மேற்கொண்டு தப்பித்தார். அப்போது கீழே விழுந்த பந்தை எடுத்த சாஹீன் அஃப்ரிடி கிரீஸுக்கு உள்ளே நின்றுக்கொண்டிருந்த அஃபிஃப் ரன் ஓடிவிடக்கூடாது என ஸ்டம்பை நோக்கி ஆக்ரோஷமாக எறிந்தார். ஆனால் அந்த பந்து எதிர்பாராத விதமாக அஃபிஃப் ஹொசைனின் காலில்பட்டு காயத்தை ஏற்படுத்தியது.
வீடியோ
வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அஃபிஃப் ஹொசைனை சக வீரர்கள் சேர்ந்து தூக்கி நிறுத்தினர். ஆனால் அவரால் நிற்க கூட முடியவில்லை. வலியினால் நொண்டி நொண்டி நடந்ததால் ரசிகர்கள் சோகமாகினர். இதுகுறித்த வீடியோ இணையத்திலும் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications