Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் ஷாகீன் அப்ரிடிக்கு நேர்ந்த சோகம்

பிரிஸ்பேன்: 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று ஆஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், வேகப்பந்து வீச்சாளருமான ஷாகீன் ஷா அப்ரிடி பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் விளையாடும் போது காயமடைந்து பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளது பாகிஸ்தான் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிரபல டி20 தொடரான பிக் பாஷ் லீக்கில், பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணிக்காக ஷாகீன் அப்ரிடி விளையாடி வருகிறார். சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

Shaheen Afridi Knee Injury in BBL Major Blow for Pakistan Before T20 World Cup 2026

போட்டியின் 14-வது ஓவரின் போது, சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தை எதிரணி வீரர் ஜேமி ஓவர்டன் நேராக அடித்தார். மிட்-ஆன் திசையில் நின்றுகொண்டிருந்த ஷாகீன் அப்ரிடி, அந்த பந்தை தடுக்க வேகமாக ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தில் இருந்து நொண்டிக்கொண்டே வெளியேறினார். அவரால் தனது முழுமையான ஓவர்களைக் கூட வீச முடியவில்லை.

காயம் ஒருபுறம் இருக்க, ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சும் இந்தத் தொடரில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்பது பாகிஸ்தான் அணிக்கு மற்றொரு சிக்கலாக அமைந்தது. காயம் ஏற்படுவதற்கு முன்னதாக அவர் வீசிய ஓவரில், ஆஸ்திரேலியாவில் பிறந்த இத்தாலிய வீரர் ஹாரி மனெண்டி, ஷாகீனை வெளுத்து வாங்கினார். அந்த ஒரே ஓவரில் மட்டும் ஷாகீன் 19 ரன்களை வாரி வழங்கினார்.

ஏற்கனவே நடுவர்களால் தடை:

இந்தத் தொடர் ஆரம்பம் முதலே ஷாகீனுக்கு நேரம் சரி இல்லை என்றே சொல்லலாம். கடந்த டிசம்பர் 15-ம் தேதி மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிக்கு எதிராக நடந்த தனது அறிமுகப் போட்டியிலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

அந்தப் போட்டியில் டிம் சீஃபர்ட் மற்றும் ஆலி பீக் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ந்து இரண்டு முறை இடுப்புக்கு மேலே ஆபத்தான முறையில் 'புல் டாஸ்' வீசினார். இதை ஆபத்தான பந்துவீச்சாகக் கருதிய நடுவர்கள், அவரை மேற்கொண்டு பந்துவீச அனுமதிக்காமல் பாதியிலேயே பந்துவீச்சிலிருந்து நீக்கினர். அந்தப் போட்டியில் அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 43 ரன்களைக் கொடுத்திருந்தார்.

இன்னும் சரியாக 6 வாரங்களில் டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக கருதப்படும் ஷாகீன் அப்ரிடி, தற்போது முழங்கால் காயத்தால் அவதிப்படுவது அந்த அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை முழங்கால் காயம் என்பது மிகவும் சிக்கலானது. இது சாதாரண தசைப்பிடிப்பாக இருந்து அவர் விரைவில் குணமடைவாரா? அல்லது உலகக்கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல் எழுமா? என்பது மருத்துவப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும்.

Story first published: Sunday, December 28, 2025, 11:42 [IST]
Other articles published on Dec 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+