Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடி கடந்த மூன்றாம் தேதி பிரபல கிரிக்கெட் வீரர் சையத் அப்ரிடி மகளான ஹன்சாவை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சியம் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இன்னும் இந்த நிகழ்ச்சியில் அப்ரிடியின் உறவினர்களும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றார்கள்.

சிறப்பான நாள்

சிறப்பான நாள்

இந்த நிலையில் புது மாப்பிள்ளையான சாகின் அப்ரிடி சமூக வலைத்தளத்தில் ட்விட் ஒன்று போட்டு உள்ளார். அதில் இறைவன் அனைத்துக்கும் போதுமானவன். எங்கள் மீது இறைவன் கருணையும் மகிழ்ச்சியையும் காட்ட வேண்டும். நானும் அனுஷாவும் ஒருவருக்கொருவர் மாலை போல் இருக்க வேண்டும்.எங்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து கூறி இந்த நாளை சிறப்பாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி.

ஏமாற்றமாக உள்ளது

ஏமாற்றமாக உள்ளது

இந்த சிறப்பான நாளில் உங்களுடைய பிரார்த்தனைகளை எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஷாகின் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் நிச்சயம் மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. திருமணம் தொடர்பான எந்த வீடியோவையும் வெளியிட வேண்டாம்.யாரும் பகிர வேண்டாம் என்று நான் கோரிக்கையை விடுத்தேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

குற்ற உணர்வில்லை

குற்ற உணர்வில்லை

நான் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் திருமணம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பரப்பி விட்டிருக்கிறார்கள். நான் மீண்டும் அனைவருக்கும் கோரிக்கை விடுப்பது ஒன்றே ஒன்றுதான். அனைவரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை கொடுங்கள். என்னுடைய இந்த சிறந்த நாளை கெடுத்து விடும்படி ஏதும் செய்து விடாதீர்கள் என்று சாகின் அஃப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார்.

சையது ஆப்ரிடி கருத்து

சையது ஆப்ரிடி கருத்து

மகளின் திருமணம் குறித்து பதிவிட்டுள்ள சையது ஆப்ரிடி, மகள் என்பவர் நமது தோட்டத்தில் பூத்திருக்கும் அருள் கொடை. மகளுடன் தான் நாம் சிரித்து விளையாடி, கனவு கண்டு, நாம் அன்பை செலுத்த முடியும். ஒரு பெற்றோராக எனது மகளை சாகின் அப்ரிடிக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். இருவருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த திருமணத்திற்கு பாபர் அசாம் உள்ளிட்ட் பாகிஸ்தான் வீரர்கள் நேரில் கலந்து கொண்டனர்.

Story first published: Sunday, February 5, 2023, 23:29 [IST]
Other articles published on Feb 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+